என் மலர்
நீங்கள் தேடியது "Amitabh Bachchan"
- இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார்.
இந்தியா திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன். அசாத்திய நடிப்பு திறமையால் நாடு முழுக்க ரசிகர்களை கொண்ட அமிதாப் பச்சன் அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலம் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 120 கோடி வரி செலுத்தியுள்ளார். இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ. 350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இதற்காக இவர் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
முன்னதாக அமிதாப் பச்சன் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மூத்த சட்டத்துறை அலுவலர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கடந்த நிதியாண்டில் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ள ரூ. 120 கோடி வரி, அவர் ஏற்கனவே செலுத்திய வரியை விட 69 சதவீதம் அதிகம் ஆகும். அமிதாப் பச்சன் வரிசையில், நடிகர் ஷாரூக் கான், சல்மான் மற்றும்
விஜய் ஆகியோர் அதிக வரி செலுத்தும் பிரபலங்களாக உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன்.
- இவர் இரண்டுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவர். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குட்பை', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அமிதாப் பச்சன்
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அமிதாப் பச்சன்
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது.
- இவர் தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

அமிதாப் பச்சன்
இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஹைதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த விவரங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவர் நலமடைய வேண்டும் என ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன்
இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை மூலம் நான் குணமடைந்து வருகிறேன். அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
T 4577 - I rest and improve with your prayers
— Amitabh Bachchan (@SrBachchan) March 7, 2023
- 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
- வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.
வானில் அரிய நிகழ்வாக நேற்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தன.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகே இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தன. இந்த அரிய நிகழ்வு சில வினாடிகள் நீடித்தது.
இந்தநிலையில் 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
அதில், என்ன ஒரு அழகான காட்சி, 5 கிரகங்கள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன. அழகான மற்றும் அரிதான காட்சி. நீங்களும் இதற்கு சாட்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.
மேலும் அவரது பதிவிற்கு நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சித்தார்த் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
- மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்.
- கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம்.
சினிமாக்களை பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும் என்ற வாசகமும், மது அருந்துவது போன்று காட்சி வந்தால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைதள பக்கத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகிய பழக்கங்களை கைவிடுவது குறித்து பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், மது அல்லது சிகரெட் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விஷயம் தான்.
ஆனாலும் அதை விட்டு விட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன். அது எளிதான விஷயம். மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள். இதற்கு நடுவில் சிகரெட்டை உதட்டில் இருந்து துப்பி அதற்கு விடை கொடுங்கள். இது தான் இரண்டு பழக்கங்களையும் கைவிடுவதற்கு சிறந்த வழி.
கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம். இது புற்றுநோயை அகற்றுவது போல் இது செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ரஜினி- அமிதாப் பச்சன்
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஜினிக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை தேர்வு செய்து வைத்த நிலையில் தற்போது இந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான 'ஹும்' படத்திற்கு பிறகு ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'.
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் அறிமுகவிழாவில், நடிகர் கமல்ஹாசன், "இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புகொண்டதற்கு முக்கியமான காரணம் நான் அனலாக் பார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன்.

நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. அதனால் ஒரு படத்தில் நெகட்டிவ் ரோல் என்பது மிக முக்கியமானது. அமிதாப் பச்சன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை என்றார். உடனே குறுக்கிட்ட அமிதாப், "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லோரையும் விட சிறந்த நடிகர்" என பாராட்டினார்.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன்.
- இவர் தற்போது புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விசயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், இவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் முடிவுக்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

தலைவர் 170 போஸ்டர்
மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 1991-ம் ஆண்டில் வெளியான 'ஹம்' திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Welcoming the Shahenshah of Indian cinema ✨ Mr. Amitabh Bachchan on board for #Thalaivar170??#Thalaivar170Team reaches new heights with the towering talent of the one & only ? @SrBachchan ???@rajinikanth @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati… pic.twitter.com/BZczZgqJpm
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023
- அமிதாப் பச்சன் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
- இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வணிகத் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் 'பிக் பில்லியன்டே' என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் 'பிக் பில்லியன்டே' விற்பனைக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறாக வழி நடத்தும் இந்த விளம்பரத்தை தடை செய்யவும், பிளிப்கார்ட்டுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளது.
மேலும் "ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். ஆகவே இந்த விளம்பரத்தை தடை செய்து, அபராதம் விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.
- இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தூத்துக்குடியில் ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுவதால் ரஜினி அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் அமிதாப் பச்சன் 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோனே கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.
இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன், அயோத்தியில் குடியேறவுள்ளார். அதாவது, அயோத்தியின் சரயு நகரில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை இவர் வாங்கியுள்ளதாகவும் இந்த நகரம் வரும் மே 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் வாங்கியுள்ள நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.5 கோடி எனவும் இந்தப் புதிய நகரத்தை லோதா நிறுவனம் உருவாக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. அன்று ராமர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.