என் மலர்
நீங்கள் தேடியது "Amutha"
- மாணவி அமுதா பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இவரது குடும்பம் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர்.
சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாணவி அமுதாவிற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுக இயக்குனர் பி.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமுதா திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் 21 நாட்களில் முடித்திருக்கிறார்கள். #Amutha
பி.எஸ்.அர்ஜுன் என்கிற புதுமுக இயக்குனர் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமுதா’. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள், யார் கொலையாளி, எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர்.
அருண் கோபன் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் உருவாகியுள்ளது. இதில், ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான ஒரு திரில்லர் படத்தை ரூ.50 இலட்சம் பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.