search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anandaraj"

    • சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் வைபவ் நடித்துள்ளார்.
    • தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

    சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.

    கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தில் வைபவின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ராஜேந்திரன் மெமரி தாஸ் என்ற கதாப்பாத்திரத்திலும் ஆனந்தராஜ் ஸ்பிலிட் சூசை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது.

    திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சதீஷ் நடித்துள்ள புதிய படம் விரைவில் ரிலீசாகிறது.
    • இந்த படத்தில் சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

    வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில், கே விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும் படம்  "வித்தைக்காரன்". பிளாக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இதனிடையே இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சதீஷ், "தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம்."

     


    "இயக்குனர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். 'V' செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் 'V' தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன்."

    "ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆனந்தராஜ் சாரை பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    பி.வெற்றிசெல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜானி' படத்தின் விமர்சனம். #JohnnyReview #Prashanth #SanchitaShetty
    பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.



    பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.

    கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

    2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.



    ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஜானி' த்ரில்லர் ஜர்னி. #JohnnyReview #Prashanth #SanchitaShetty

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் விமர்சனம். #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri
    விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

    யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.



    இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் சிங்கம் புலி அங்கிருந்து ஒரு பையை எடுத்து வருகிறார். அந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, அதிலும் லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

    இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் இருவரையும் தேடி வருகிறார்.



    கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி புயல் மியாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். சிங்கம் புலி குருவாக வர, விமல் அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். சிங்கம் புலி வழக்கமான தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

    ஆஷ்னா சவேரி காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மியா ராய் லியோன் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். மற்றபடி ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ் வருகைக்கு பின் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' சிறியதாக இருக்கு. #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகிறார். #IvanukkuEngaiyoMachamIruku
    விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆபாச பட நடிகை மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவர் சன்னி லியோனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.



    ஐரோப்பிய பட உலகில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இந்திய சினிமாவுக்கு வந்த சன்னி லியோன் ஆபாச படங்களை தவிர்த்து இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மியா ராய் லியோனும் இணைந்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #MiaRaiLeone

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் முன்னோட்டம். #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
    சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.

    விமல் - ஆஷ்னா சவேரி நாயகன், நாயகியாக நடிக்க ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா போலீஸ் வேடத்திலும், ஐரோப்பிய பட உலகின் ஆபாச நாயகிகளில் ஒருவரான மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் - விவேகா, கலை - வைரபாலன், நடனம் - கந்தாஸ், 
    ஸ்டண்ட் - ரமேஷ், படத்தொகுப்பு - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்.



    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

    இது கிளாமர் கலந்த காமெடி படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri

    இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்

    ×