என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andipatti"
ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர். வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக நாங்கள் தான் தகவல் தந்தோம். ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம்சாட்டுகிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்” எனவும் வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட 30 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க திப்பரவு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற் கொள்ளாததால் வறட்சி காலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே கம்பம் முல்லைப் பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி 47 கி.மீ தூரம் குழாய் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் இடம் பெற வில்லை.
எனவே இப்பிரச்சினையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்து கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4-ம் நாளாக இன்று கொட்டப்பட்டி கிராமத்தில் கால்நடைகளுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனால் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் பலமாக எதிரொலித்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு பகுதியை சேர்ந்த பேயத்தேவர் மகன் கபிலன் (வயது21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராஜலிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அரப்படிதேவன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள குமணன்தொழு மன்னூத்து பகுதியை சேர்ந்தவர் மொக்கையன் (வயது45). இவர் வெள்ளிமலை எஸ்டேட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கு இருமல் இருந்ததால் வீட்டில் இருந்த கால் வலி தைலத்தை டானிக் என நினைத்து குடித்து விட்டார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு கடமலைக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜதானி அருகில் உள்ள மத்துசங்கிலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித் (24). இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தார். வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி வந்தார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜதானி அருகில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (58). குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கி.காமாட்சிபுரம் தென்பழஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது42). அதே பகுதியில் சொந்தமாக நிலம் வைத்து வெள்ளைச் சோளம் பயிரிட்டு வருகிறார். மேலும் கால்நடைகளும் வளர்த்து வருவதால் தீவனங்களை தோட்டத்தில் வைத்திருந்தார்.
இந்த தோட்டத்தில் திடீரென தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது குறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் வெள்ளைச் சோளம், கால்நடை தீவனங்கள், வைக்கோல் போர் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
அவரது தோட்டத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பவரது செல்போன் கண்டெடுக்கப்பட்டது. எனவே அவர்தான் தனது தோட்டத்திற்கு தீ வைத்திருக்க கூடும் என செல்வம் ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம்குமார் தீ வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் அல்லல்ஓடை பகுதியில் குமணன்தொழுவை சேர்ந்த வேலுத்தேவர்(வயது42) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்த அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மூலக்கடை எதிரே உள்ள பெட்டிக்கடையில் சிறப்பாறையை சேர்ந்த அன்பழகன்(43), அதேபகுதியில் துரைசிங்கம்(42), குமணன்தொழு கருப்பசாமிகோவில் அருகே உள்ள மீராதெருவை சேர்ந்தவர் ராஜா(40) மற்றும் கடமலைக்குண்டு வசந்தகுமார்(31) ஆகியோர் அனுமதி இன்றி மதுபதுக்கி விற்றதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சேடப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 71). அதே ஊரைச் சேர்ந்த முனிசாமி (வயது 54). ராஜனின் மகன் பால்பாண்டி. திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பால்பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இதனை குத்திக்காட்டி ராஜனிடம் தகராறு செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி அவர்களை திட்டி விட்டு சென்றார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜனிடம் பிரச்சினை செய்தனர்.
சம்பவத்தன்று முனிசாமி அவரது மனைவி சீனியம்மாள் மகன் நாகேந்திரன் ஆகியோர் ராஜனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜனின் மனைவி மணித்தாயும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து முனிசாமி மற்றும் நாகேந்திரனை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் முகிதா (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமடைந்த மாணவி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கண்டமனூர் சாலையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடமலைக்குண்டுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பராமரித்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை மூடிச் சென்றார். மறு நாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சோலார் பேனல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வருஷநாடு அருகே உள்ள தும்மக் குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), விக்னேஷ் (24) ஆகியோர் சோலார் பேனலை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சோலார் பேனலையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்