என் மலர்
நீங்கள் தேடியது "Andrea"
- இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
- இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.
நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

வட்டம்
வட்டம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள் என்றார்.











#Vadachennai comes with its raw, gritty, uncut intensity to the theatres from 17th October, censored ‘A’. #oct17#anbu
— Dhanush (@dhanushkraja) October 9, 2018