search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Android Go"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ரய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும். #RedmiGo



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். 

    புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 4ஜி எல்.டி.இ., பிரத்யேக சிம் கார்டு ஸ்லாட்கள் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். 
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி கோ முதல் விற்பனை மார்ச் 22 ஆம் தேதி ப்ளிப்கார்ட், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் துவங்குகிறது.

    புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. #RedmiGo



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி கோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இது சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். 

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 4ஜி எல்.டி.இ. மற்றும் பிரத்யேக சிம் ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.



    சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 16:9 டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
    - டூயல் சிம்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி கோ ஸ்மாரட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை 75 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,240) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வலைதளங்களில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Samsung #androidgoedition



    சாம்சஹ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ2 கோர் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சாம்சங் மற்றொரு ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    மற்ற ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல், கேலக்ஸி ஜெ4 கோர் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 6.0 இன்ச், 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே இருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புளு, பெய்க் மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
    சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஜெ2 கோர் என பெயரிடப்பட்டுள்ளது. #smartphone


    சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஜெ2 கோர் என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் 5.0 இன்ச் TFT டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7570 குவாட்-கோர் 14 என்.எம். பிராசஸர், 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் என்பதால் கைரேகை சென்சார் அல்லது ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
    - மாலி-T720 MP1 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் கிடைக்கிறது. ஆகஸ்டு 24-ம் தேதி முதல் இந்தியா மற்றும் மலேசியாவில் கேலக்ஸி ஜெ2 கோர் விற்பனை துவங்கும் நிலையில், மற்ற சந்தைகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சீனாவை சேர்ந்த ஆல்காடெல் நிறுவனம் மலிவு விலையில் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.




    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆல்காடெல் புதிதாய் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை வெளி்யிட திட்டமிட்டுள்ளது. ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் ஆன்ச்ராய்டு கோ சீரிஸ்-இல் விலை குறைந்த மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு கோ அல்லது ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) என்பது விலை குறைந்த என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கான தளம் ஆகும். ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ரஷ்யாவில் லீக் ஆன நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் அறியப்படாமல் உள்ளது.



    ஆல்காடெல் 1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 480x960 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6739 பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - டூயல் சிம் எல்டிஇ
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - 5 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×