search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angarakan"

    • அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.
    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானது.

    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி' விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது.

    நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.


    அங்காரக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளக்குகிறது.

    பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள்.

    அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.

    குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்வாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.

    உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.

    அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.

    அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.


    அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.

    எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

    அங்காரகனால் தொடங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.

    கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.

    • செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.
    • எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாய்க்கு, `அங்காரகன்' என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தை புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளை கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்கு சென்று அங்குத்தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி. தேவியைப்பிரிந்து யோகத்தில் இருந்த சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வியர்வை உண்டாகி பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு `பூமி புத்திரன்' என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரிய பதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும் பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும், அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும் பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    பழனி

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய்ப்பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும். பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும். பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனைத்தரிசிக்க வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக்கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும். சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும். திருமண தோஷத்திற்கு மட்டும் கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மேலக்கடம்பூர்

    சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் மேலகடம்பூர் உள்ளது. கருவறையின் அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    செவ்வாய் பகவான் வழிபட்டதோடு அவரது அதிதேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டுவில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும். எனவே இத்திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.

    திருச்சிறுகுடி

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதை யில் சென்று கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையை கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம். இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர்-மங்கள விநாயகர் என்றும், இறைவன்-மங்கள நாதர் என்றும், அம்பாள்-மங்கள நாயகி என்றும், தீர்த்தம்-மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள் விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்று செல்ல வேண்டும். முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும். மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித்தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    நவக்கிரகங்களில் முக்கியமானவரான செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். இப்போது செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் யோகம் தரக்கூடிய வகையில் பலமாக அமைந்திருந்தால், சில நன்மைகள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படுபவராக இருப்பார். அவருக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்படாது. அந்த ஜாதகர், மாட மாளிகை, அரண்மனை போன்ற வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறுவார். பூமியால் யோகம் கிடைக்கும். அவருக்கு நிலத்தில் இருந்து புதையல், பொன், பொருள் கிடைக்கலாம். செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர் விவசாயத்தில் கொடிகட்டி பறப்பார். அந்த ஜாதகருக்கு பொதுமக்களிடம் நல்லபெயர், புகழ் கிடைக்கும்.

    மேலும் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கக்கூடும். அரசாள்பவர்களையே, அஞ்சாமல் கேள்வி கேட்கும் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பர். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். சகோதரர் மற்றும் பங்காளிகளின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். ஒருவர் மருத்துவத் துறையில் நற் பெயர் எடுப்பதற்கு காரணமும், செவ்வாய் கிரகம்தான்.

    அதே போல் மருத்துவத் துறையில் புதிய புதிய படிப்புகளைப் படித்து, அதிமேதை பட்டம் பெறுவதற்கும், நவீன மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அதிபதியாவதற்கும் வழிகாட்டு பவர் செவ்வாய் தான். மின்சார வாரியம், தீயணைப்புத் துறையில் உயர்பதவி கிடைக்க, செவ்வாய் பலமே முக்கியக் காரணம். முதுமை காலம் வரை ஒருவர் உழைப்பதற்கு, அதற்குரிய சக்தியைத் தருபவர் செவ்வாய் என்றால் அது மிகையல்ல. பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம், காற்றாலை மின் விசிறி அமைக்கும் தொழிலுக்கு அதிபதியாக்கும் ஆற்றல் படைத்தவர் செவ்வாய். ஒரு சிலருக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து திருமணம் நடைபெறும். அதற்கு காரணமான வரும் இதே செவ்வாய் பகவான் தான்.

    செவ்வாயால் வரக்கூடிய நோய்கள்

    ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய். ஒருவரது நோய் தன்மை, அதன் வீரியம் பற்றி உணர வைப்பது செவ்வாய் கிரகம் தான். இவர் தான் விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் சம்பவிக்கவும் காரணமானவர். செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். பிறரின் ரத்தம் மூலம் வரக்கூடிய நோய்களுக்கும் இவரே மூலகாரணம்.

    ரத்தசோகை, ரத்த புற்றுநோய், மஞ்சள் காமாலை, காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள், உடல் மெலிவு, கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், உடல் உணர்வற்று போவது, அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், வெடிப்பு உருவாவது, மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.

    அதுமட்டுமின்றி, தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள், வெடி விபத்து, வாகனத்தில் தீவிபத்தால் பாதிக்கப்படுவது, கிணறு வெட்டும் போது மண் சரிந்து பலியாவது, நோயால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது, இடி- மின்னலால் ஏற்படும் இறப்பு, துப்பாக்கி தயாரிக்கும் இடங்களில் உண்டாகும் விபத்து, பூமிக்காக.. நிலத்திற்கான பிரச்சினையில் ஏற்படும் கொலை, துரித உணவுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றிற்கு செவ்வாய் தான் காரணம்.



    செவ்வாய் பாதிப்பிற்குரிய விதிமுறைகள்

    * செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். இந்த ஜாதகர் சகோதர்களிடம் இணக்கம் இல்லாமல் இருப்பார்.

    * செவ்வாய் நீச்ச ராசியான கடகத்தில் நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். வசிக்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்களில் உண்டாகும் நோய்கள் தாக்கக்கூடும். மூச்சுக் கோளாறுகள் வரலாம்.

    * செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன், ராகுவோடு இணைந்து இருந்தால், புற்று நோய்கள் வரலாம். ரத்தத்தில் விஷக் கிருமிகள் உண்டாகும். நரம்புகளில் ரத்த அடைப்பு வரலாம். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

    * செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம். புதிய நோய்கள் வரக்கூடும். ரத்தம் ஓட்டம் சீராக இல்லாமல் கை, கால் பிடிப்பு தலைவலி வரக் கூடும்.

    * செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தெரிந்தோ தெரியாமலோ பிறரது தொற்று நோய் தாக்கக்கூடும். பூமி, மனை, காடு, தோட்டம் சிக்கல் தரக்கூடும்.

    * செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங் களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்வு, ரத்தக் குழாய் வெடிப்புகள், இனம் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரக்கூடும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.

    * செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தாலோ, அந்த ஜாதகரின் ரத்தம் சமயத்திற்கு உதவாமல் போகலாம். ரத்தம் கெட்டு போகும் நிலை ஏற்படக்கூடும். பற்களில் ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டாகும்.

    * செவ்வாய்க் கிரகமே லக்னத்திற்கு பாதகாதி பதியாக இருந்தால், அந்த ஜாதகருக்கு வெட்டுக் காயம், தீ காயம், விபத்துகள் மூலம் ரத்தம் வீணாகும். காற்றில் பரவும் கிருமிகள் உடலைக் கெடுக்கும். புரியாத நோய்கள் வரக் கூடும்.

    * செவ்வாய் பகை கிரகங்கள் மற்றும் பாதகாதி பதிகளின் கிரகப் பார்வை பெற்றிருந்தால், நினைத்தது போல் உடல் ஒத்துழைப்பு தராமல் போகும். ஏதாவது உடல்நலக்கேடு இருந்து கொண்டே இருக்கும். நோய்கள் போக்குவதில் உரிய அக்கறை இருக்காது.

    * செவ்வாய் அஷ்டவர்க்கத்தில் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், செவ்வாய் கிரகத்தால் ஏதாவது நோய்கள் வரக்கூடும். உடலில் போதுமான எதிர்ப்புகள் சக்திகள் இல்லாமல் இருக்கும்.

    - ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    செவ்வாய் (அங்காரகன்) பகவானுக்கு உகந்த ராசிகள், நட்சத்திரங்கள் உச்ச ராசி, ஆட்சி ராசி போன்ற பல்வேறு முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    காரகம் - சகோதரம்

    தேவதை - சுப்பிரமணியர்

    தானியம் - துவரை

    உலோகம் - செம்பு

    நிறம் - சிவப்பு

    குணம் - ராஜஸம்

    சுபாவம் - குரூரர்

    சுவை - துவர்ப்பு

    திக்கு - தெற்கு

    உடல் அங்கம் - தலை

    தாது - மஜ்ஜை

    நோய் - பித்தம்

    பஞ்சபூதம் - நெருப்பு

    பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 4,7,8 இடங் களின் முழு பார்வை. 3, 10-ம் இடங்களின் மீது கால்பங்கு பார்வை, 5, 9 ஆகிய இடங்களின் மீது அரை பங்கு பார்வை பார்ப்பார்.

    பாலினம் - ஆண்

    உபகிரகம் - தூமன் சுரேசன்

    ஆட்சி ராசி - மேஷம்,

    உச்ச ராசி - மகரம்

    மூலத்திரிகோண ராசி - மேஷம்

    நட்பு ராசி - சிம்மம், தனுசு, மீனம்

    சமமான ராசி - ரிஷபம், துலாம், கும்பம்

    பகை ராசி - மிதுனம், கன்னி

    நீச்ச ராசி - கடகம்

    திசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்

    ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை மாதம்

    நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், குரு

    சமமான கிரகங்கள் - சுக்ரன், சனி

    பகை கிரகங்கள் - புதன், ராகு

    அதிக பகையான கிரகம் - புதன்

    இதர பெயர்கள் - அங்காரகன், உதிரன், குஜன், ஆரல், சேய், மங்கலம், நிலமகன்

    நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
    ×