என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angel"

    • தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
    • படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது ஏஞ்சல் என்கிற படம் ஒன்றில் நடித்தார்.

    ஏஞ்சல் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார். இப்படத்தை ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தயாரித்தார்.

    இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.

    ஏஞ்சல் படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவையில் இருக்கும் போது, 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்று விட்டார். இதனால் ஏஞ்சல் படம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    அதில், 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி தயாரிப்பாளர் ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உதயநிதி அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘ஏஞ்சல்’ படத்திற்காக இரண்டு கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Angel #Udhayanidhi
    ‘ஏபிசிடி’, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து OST FILMS ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’.  ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

    அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘ஆர்.எக்ஸ் 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.



    “உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.
    ×