search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angelin"

    • சென்னையில் பெரும்பாலான இடங்களில் மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
    • தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இது எதற்கான விளம்பரமாக இருக்கும் என மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் அதற்கான விடையை தற்பொழுது வெளியாகியுள்ளது.

    இது ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராகும். இத்தொடரின் பெயர் மதுரை பையனும் சென்னை பொண்ணும். இதில் தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகருமான சசிக்குமார் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இத்தொடரின் நடித்து இருப்பவர் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏஞ்சலின். சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களிலும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது அதன் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளாத்தை உருவாக்கினார்.

    இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். சஞ்சய் தயாரித்துள்ளார். இத்தொடர் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏஞ்சலின் அழகாக புடவை அணிந்துக் கொண்டு இருக்கிறார். கண்ணா ரவி பழைய ஸ்கூட்டர் ஒன்றை தள்ளிக்கொண்டு வருகிறார். இவர்களுக்கு பின் கோவில் இடம் பெற்றுள்ளது. தொடரின் மற்ற விவரங்கள் நடிகர்கள், டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    எம்மாதிரியான் காதல் கதையாக அமையவுள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. ஏஞ்சலின் நடிப்பில் முதல் முறையாக வெளிவரும் தொடர் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×