என் மலர்
நீங்கள் தேடியது "Anikha"
நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தில் கவுதம மேனனின் ‘என்னை அறிந்தால்’ கனெக்ஷன் ஏற்பட்டுள்ளது. #Ajith #Viswasam
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும் மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.
அஜித் அனிகா நடிப்பில் உருவான உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது படமான விசுவாசத்திலும் அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விசுவாசம் படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அண்ணன் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் ஒரு அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது.