search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjani Kumar"

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    ×