என் மலர்
நீங்கள் தேடியது "antha naal"
- நடிகர் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ள திரைப்படம் “அந்த நாள்”.
- இந்த படத்தை வி.வி. கதிரேசன் இயக்கினார்.
க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் "அந்த நாள்". இந்த படத்தில் ஆதி பிரசாத், லீமா எஸ் பாபு, கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்தை வி.வி. கதிரேசன் இயக்கினார். கதை மற்றும் திரைக்கதையை ஆர்யன் ஷ்யாம் எழுதியுள்ளார். நரபலி மற்றும் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது மற்றும் பல்வேறு நாடுகளில் 8 அதிகாரப்பூர்வமான விருதுகளை பெற்றுள்ளது.
பார்த்திபன் - ஆர்யன் ஷ்யாம்
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாம் அவரது "அந்த நாள்" திரைப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார். மேலும் சமீபத்தில் பார்த்திபன், ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார்.