என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "anti corruption"
- மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது.
- அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
- ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.
திருப்பூர்,அக். 26-
கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக குற்றச்சாட்டு.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மாநில விஜிலென்ஸ் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகரில் கைது செய்யப்பட்டா சோனியை, பின்னர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று உத்தரவிடப்பட்டது.
2006ம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த காலகட்டத்தில், ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விஜிலன்ஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- ஊழலற்ற பாரதம் - வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து ஊழலற்ற பாரதம்- வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சுரேந்திர கெளங்கர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது. பொது நலம் சார்ந்த சிந்தனை உடையவர்களாலேயே ஊழலை ஒழிக்க முடியும் என்றார். அதன் பின்னர் ஊழற்ற பாரதம், வளர்ந்த தேசம், ஊழல் ஒழிப்பு, சிக்கனமும் சிறுசேமிப்பும் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி, முதல்வர் மணிமலர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் சுரேஷ், லஞ்ச ஒழிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
- சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஈரோடு:
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.
உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியே சென்று அரசு தலைமை மருத்துவ–மனை வளாகத்தை வந்தடைந்தது.
இதில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ் (பொது), தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
- பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்புவதற்கு மக்களை அனுமதிக்கும் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
அதன்படி, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் பெறப்படுவதாக பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், எங்கள் கனவு-- ஊழல் இல்லாத பஞ்சாப் என்று குறிப்பிட்டிருந்தது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறை துறை சூப்பிரண்டாக இருந்த ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. சசிகலாவுக்கு சிறையில் சலுகை செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த குழு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
சலுகை செய்ய லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படைதான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் கூறி இருந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூபா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வு பெற்ற சிறை துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ், புகார் கொடுத்த ரூபா மற்றும் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோருடன் விசாரணை நடத்தினர்.
சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் வெளியான தகவலால் மீண்டும் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி நேரில் ஆஜரானார். அவரிடம் ஊழல் தடுப்பு படை துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Pugazhendi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்