search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti corruption agency"

    இந்தோனேசியாவில் அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக கவர்னர் இரவாண்டி யூசுபை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். #Indonesia #GovernorIrwandiYusuf
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப். இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார்.

    தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, சிறையில் இருந்து தப்பித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. பின்னர் இவர் அரசுடனான சமரச உடன்படிக்கைக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்டு கவர்னர் ஆனார்.

    இவர் 500 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.3,400 கோடி) மேற்பட்ட அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக இவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவரை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இந்த ஆஷே மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது, இங்கு இஸ்லாமிய மதச்சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #GovernorIrwandiYusuf #Tamilnews 
    ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

    எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

    அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

    இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என தெரியவரும்.  #Malaysia #NajibRazak
    ×