என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anumar"
- உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
- ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.
1) ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.
பொன் நிறமுடையவன் என்ற பொருளும் அவருக்கு உண்டு. அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளி விடும்
முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.
2) ஆஞ்சநேயரை வழிபட்டால் மக்கள் பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
3) ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர்.
மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.
4) உடல் மற்றும் மன வலிமையை பெருக்க நினைப்பவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
5) ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.
6) படிப்பில் மந்தமான குழந்தைகளை "ஸ்ரீ ராமஜெயம்" 108 முறை அல்லது 1008 முறை எழுத வைத்து அதை
மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
7) "ராம் ராம்" என்ற ராம நாமத்தை தியாகராஜ சுவாமிகள் 96 கோடி தடவை ஜெபித்து ஸ்ரீராமர் தரிசனம் பெற்றார்.
8) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் ஆஞ்ச நேயர் ஜெயந்தியை மார்கழி மாதம் மூல நட்சத்திரமும்,
அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடுகிறார்கள். மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும்
சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம்.
ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
9) ஆஞ்சநேயருக்கு "நைஷ்டிகப் பிரம்மசாரி" என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் பிரம்மச்சாரி என்றாலும் பெண்களும் அவரை வழிபடலாம்.
10) ஆஞ்சநேயருக்கு "சிறிய திருவடி" என்ற சிறப்பு பெயர் உண்டு. (பெரிய திருவடி-கருடன்)
11) சித்திரையில் ஸ்ரீராம நவமி தினத்திலும், மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
12) ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.
13) ராகவேந்திர சாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பு "பஞ்சமுகி" யில் ஆஞ்சநேயரை தியானித்தார் என்று வரலாறு கூறுகிறது.
14) வியாசராஜர் 732 இடங்களில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளார்.
15) புரந்தர தாசர் ஆஞ்சநேயர் பாடல்களை பாடி உள்ளார். துளசி ராமாயணத்தில் ஆஞ்சய நேயரைப் பற்றி பாராயணம் உள்ளது.
16) சுந்தர காண்டத்தில் ஆஞ்ச நேயரின் புகழ் பற்றி குறிப்பிப்பட்டு உள்ளது.
17) ஆஞ்சநேயர் கடலை கடந்தது, இலங்கையில் சீதையை மீட்டது, போர்க்களத்தில் சுருண்டு விழுந்த லட்சுமணன்
உள்ளிட்டவர்களுக்கு மூலிகை உள்ள மலையை தூக்கி வந்து மூலிகையால் அவர்களை குணப்படுத்தியது என்று
அவர் செய்த செயல்கள் அனைத்தும் வெற்றியானது. அதேபோல ஆஞ்சநேயரை வழிபட்டவர்களுக்கு
அனைத்து காரியங்களிலும் ஆஞ்சநேயர் வெற்றியை கொடுப்பார்.
18) ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
19) ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
20) வீட்டு வாசலில் சிலர் வாஸ்து கணபதி படத்தை வைத்து இருப்பார்கள். ஆனால் வீட்டு வாசலில் ஆஞ்சநேயர் படத்தை வைக்கக்கூடாது.
- 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும்.
1) மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
2) தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.
3) ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.
4) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். சந்தனக்காப்பு, வெண்ணெய் காப்பு செய்யப்படுகிறது.
5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
6) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், கட்டண விவரங்கள் டிஜிட்டல் போர்டு (எல்.இ.டி) மூலம் பக்தர்கள் பார்க்கும் அளவுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.
7) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
8) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.
9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.
10) ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.
11) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூ மாலைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
12) 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
13) வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். விஷேச மலர் அலங்காரம் செய்யப்படும். முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க கவசம் மற்றும் வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது.
14) தினமும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கட்டணம் செலுத்தி தங்க ரதத்தை புறப்பாடு செய்யலாம்.
15) குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.
- பிரம்மாவாக ஆவதற்கு நான்கு சக்திகள் தேவை.
- இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
ராமபிரானுக்காக உழைத்த ஆஞ்சநேயருக்கு வைகுண்டத்தில் என்ன பதவி கொடுப்பது என்ற ஆலோசனை நடந்தது.
தேவர்கள் அனைவரும் ஒருமனதாக கடைசியில் வரப்போகும் யுகத்திற்கு, அவரை பிரம்மாவாக தேர்ந்து எடுத்தார்கள்.
தேவர்கள் பூலோகம் வந்து பிரம்மன் சின்னங்களான சங்கு, சக்கரம், கிரீடம், குண்டலம் இவற்றை அளித்தார்கள்.
ஆனால் அனுமன் அதை ஏற்க மறுத்தார். "ராம நாமமே" எனக்கு மனநிறைவைத் தருகிறது.
எனக்கு பிரம்மாவின் வேலை என்ன என்பதே தெரியாதே! என்றார்.
அப்போது மகாவிஷ்ணு தோன்றி "பிரம்மாவின் படைப்பு விந்தைகள் உனக்கே தெரியும்.
தெரியாததை நான் கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது சொல்வேன்" என்று கூறி மறைந்தார்.
கிருஷ்ண அவதாரத்தில் நடந்த பாரத போரில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்து கீதா உபதேசம் செய்தார்.
அது அர்ஜூனனுக்கு மட்டுமல்ல. தேரில் கொடியாக இருந்த அனுமனுக்கும் தான்.
பிரம்மாவாக ஆவதற்கு நான்கு சக்திகள் தேவை.
அம்ருதம் என்ற வர்ஷிக்கும் சக்தி.
(இது இருந்தால் தான் உயிருட்ட முடியும்) விஷத்தை அடக்கும் சக்தி.
(இது இருந்தால் தான் உயிர் வாழ முடியும்) நிலைநிறுத்தும் சக்தி.
(அதல பாதாளத்தில் விழுபவைகளை தூக்கி நிறுத்தும் சக்தி) குரு மண்டலத்தில் அகர ஸ்தானம் வகித்தால் தான் சர்வ மந்திரப் பிரேரணமும் சித்திக்கும்.
இந்த நான்கு சித்திகளையும் பெற்றால் தான் பிரம்மா செய்யும் வேலைகளை செய்ய முடியும்.
நான் ராம நாமம் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன்.
இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிய போதிலும் மும்மூர்த்திகளும் கேட்கவில்லை.
அதனால் அம்ருதம் வர்ஷிக்க ஸ்ரீ நரசிம்மத்தை குறித்து தவம் செய்தார்.
இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.
கருடனை குறித்து தவம் செய்தார். அதன் பயன் கருட முகம் கிழக்கு நோக்கி முளைத்தது.
கருட முகம் பாம்பு போன்ற கொடிய விஷங்களில் இருந்து காப்பாற்றுகிறது.
வராஹ மூர்த்தியை நோக்கி தவம் செய்யும் போது வடக்கு நோக்கி வராஸ முகம் முளைத்தது.
வராஹ மூர்த்தியின் முகம் பக்தர்களுடைய உடல் பிணிகளை அகற்றும்.
ஹயக்கீரிவரை நோக்கி தவம் செய்தார். அதனால் அவரது முகம் மேல்புறம் தோன்றியது.
ஹயக்கீரிவருடைய முகம் பக்தர்களுக்கு அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுக்கக்கூடியது.
இப்படி அனைத்து சக்திகளும் ஆஞ்சநேயருக்கு கிடைத்தன.
ஏற்கனவே சங்கு சக்கரம், அஷ்டதிக்பாலர்களின் சக்திகள், விஷ்ணு சக்தி, மூன்றாவது கண் எல்லாம் பெற்ற
நம்மோடு வாழும் சிரஞ்சீவி ஆஞ்சநேயரை நாம் வணங்கும் போது புத்தி, பலம், புகழ் மன உறுதி,
அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையையும் நமக்கு தந்து ஆசீர்வதிப்பார்.
- நமது ஐயப்பாடு நீங்கவே விஸ்வரூப கோலத்துடன் நிமிர்ந்து கைகூப்பி நிற்கிறார்.
- ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி முதலிய நன்மைகள் ஏற்படும்.
நாமக்கல் நகரில் நடுநாயகமாக விளங்கும் மலையான சாளக்கிராமத்தை நேபாள தேசத்திலிருந்து எடுத்து வந்து
ஸ்ரீநரசிம்ம மூர்த்தி திருஉளப்படி இந்நகரில் ஸ்தாபனம் செய்து "ஸ்ரீநாமகிரி" நாமக்கல் என்னும் பெயரை
நிலை நாட்டிய பெருமை ஸ்ரீ ஆஞ்சநேயரையே சார்ந்தது.
நமது ஐயப்பாடு நீங்கவே விஸ்வரூப கோலத்துடன் நிமிர்ந்து கைகூப்பி நிற்கிறார்.
மேலே விதானம் இன்றி திறந்த வெளியில் காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு கம்பீரமாக தரிசனம் கொடுக்கிறார்.
இன்னமும் வளர்ந்து கொண்டிருப்பதால் மேல்விதானம் கட்டப்படவில்லை.
இதைத் தவிர லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானமின்றி இருப்பதால்
தாசனான தனக்கும் அது தேவையில்லை என்று முன்னோர்கள் விதானம் கட்ட முயற்சித்தபோது
ஸ்ரீ ஆஞ்சநேயர் சொப்பனத்தில் அருளியதாக சொல்லப்படுகிறது.
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தமது குறைகளை சமர்ப்பித்து
தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீ ஆஞ்சநேயர் உதவியால் சாதித்து கொண்டு
தங்களால் இயன்ற வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள்.
நவக்கிரகங்களில் குரூரமான சனி, ராகு, இவர்கள் பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு
நல்லெண்ணையில் செய்த உளுந்துவடைகளால் செய்த மாலைகள் சாற்றியும், விசேஷ திரவியங்களால்
அபிஷேகங்கள் செய்வித்தும், புஷ்பங்களாலும் வாசனை சந்தனத்தாலும் அலங்காரம் செய்து மகிழ்ந்தும்
தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதூர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.
- ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம்.
- ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.
படங்கள் வழிபாடு
ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம். வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம்.
இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும்.
ராமநாம உச்சரிப்பு வழிபாடு
ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம்.
ஆகவே ராமநாம பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.
- துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது.
- பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.
துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது.
ஆகவே துளி இலைகளை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வணங்குகிறோம்.
பழமாலை வழிபாடு
பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.
எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
- அசோகவனத்தில் அனுமன் சீதாவை பார்த்த போது அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.
- ராமபிரான் மங்களகரமாகவும், பத்திரமாகவும், இருப்பதன் சின்னமாக செந்தூரப்பொடி அணிந்து கொண்டார்.
அசோகவனத்தில் அனுமன் சீதாவை பார்த்த போது அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.
அப்போது அனுமான் பல விளக்கங்களை நேரில் சொல்லி ராமபிரான் சுகமாகவும் பத்திரமாகவும் இருப்பதாகவும்
சீதா பிராட்டியாரின் நினைவாகவே இருப்பதாகவும் சீதாபிராட்டியாரைத் தேடித்தான் அலைந்துக் கொண்டு
இருக்கிறார் என்ற நல்ல செய்திகளைச் சொன்னார்.
இச்செய்திகளை கேட்டதும் சீதா மகிழ்ச்சி அடைந்து கீழே இருந்த சிந்தூரப் பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டார்.
ராமபிரான் மங்களகரமாகவும், பத்திரமாகவும், இருப்பதன் சின்னமாக செந்தூரப்பொடி அணிந்துக் கொண்டார்.
உடனே அமனுர்பிரானும் ஸ்ரீராமபிரான் சகல மங்களங் களுடன் இருப்பதற்காக தானும் உடனே அங்கிருந்த
செந்தூரப்பொடியை எடுத்து உடம்பு முழுவதும் பூசிக் கொண்டார்.
இதனால் தான் நாம் அனுமாருக்கு சிந்தூரம் அணிவிக்கிறோம். நமது நெற்றியில் சிந்தூரப் பொட்டு அணிந்து கொள்கிறோம்.
- அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.
- அப்படிச் செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.
அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து
அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும்.
அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும்.
அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.
அப்படிச் செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.
- ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார்.
- ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.
ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார். இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார்.
அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாக போகக்கூடாது.
என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.
நான் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார். உடனே சிவபெருமான் அப்படியானால் " நீ எனது வாலினுள் புகுந்துவா," என்றார்.
அதன்படி அனுமானுடைய வாலாக பார்வதி தேவி உருப்பெற்றார்.
ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால் அனுமன் வாலை கல்யாணம் ஆகாத
கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.
அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.
ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது நவக்கிரங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.
- பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.
- குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு ஒரு வரலாறு உள்ளது.
பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.
குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாக சொல்லிக் கோபப்பட்டார்.
உடனே அனுமார் "வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை. நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு" என்று சொன்னார்.
பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை.
அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.
தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார்.
பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே!
அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.
அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.
இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
- உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
- ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்ற ஐதீகம் உள்ளது.
உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.
ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனாதேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள்.
ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம்.
களைப்பில்லாமல் இருக்கலாம்.
ஆகவேதான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது.
அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.
ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார்.
ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது.
- “சிரஞ்சீவியாக வாழ்வாயாக” என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.
- ஆகவே வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று
சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்த போது வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து
"சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.
ஆகவே வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று ஆகவே வெற்றிலை மாலையாகத் தொடுத்து
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்