என் மலர்
நீங்கள் தேடியது "Anushka Shetty"
- அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது
- இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.
காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
மேலும் பேய் கதாப்பாத்திரத்தில் 'கள்ளியங்கட்டு நீலி' ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.

இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.
- அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
- ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்.
2005-ல் தெலுங்கில் வெளியான சூப்பர் என்கிற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி.
ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அனுஷ்கா, தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
ரஜினியுடன் லிங்கா, விஜயுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே மிகவும் குறைவான பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் அனுஷ்கா.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக திருமணத்திற்கு அனுஷ்கா தயாராகிவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா.
- இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.
இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இஞ்சி இடுப்பழகி
இந்நிலையில், அனுஷ்கா மீண்டும் உடல் எடையை அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் நடிக்க தயாராக இருந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அப்டேட் அனுஷ்கா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








