என் மலர்
நீங்கள் தேடியது "Anushka"
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, எடையை குறைத்த பிறகுதான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #Anushka
நடிகை அனுஷ்காவுக்கு பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் இல்லை. எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
“நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.
என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
`விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கவுதம்மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. #GVMSTRARRNxT #STR
`விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்.
அந்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GVMSTRARRNxT #STR #GauthamMenon #ARRahman #VTV2
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.
"மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
பிரபாசும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், பிரபாசின் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும், மணப்பெண்ணை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.
திரையில் இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்ததால் இருவருரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், பாகுபலி படமும் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர்.
முன்னதாக பாகுபலி படம் ரிலீசுக்கு பிறகு, பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்பட்டது. அனுஷ்கா சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி வந்தார். ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் திருமண தடை நீங்க அவர் பரிகாரங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை கவனித்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதனால் தெலுங்கு பட உலகினரும், ரசிகர்களும் மணமகள் யார்? என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணமாக இருக்கிறார்கள். அனுஷ்காவைத் தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் `சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. #Prabhas #Anushka
12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாதவன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக பிரபல நடிகை நடிக்க இருக்கிறார். #Madhavan
சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘ரெண்டு’. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இதில் இடம் பெற்ற ‘மொபைலா மொபைலா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் அனுஷ்கா.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளது. சைலன்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் திரைக்கதை எழுதுவதோடு பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்காவில் செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
புதுடெல்லி:
ஆடம்பர காரில் இருந்தவாறே, மும்பை சாலை ஒன்றில் குப்பை கொட்டியவரை நடிகை அனுஷ்கா சர்மா கண்டித்த காட்சி, சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அக்காட்சியை அவருடைய கணவரும், கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி படம் பிடித்து வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “அனுஷ்கா, விராட்கோலி ஆகியோருக்கு விளம்பரம் தேவை என்றாலும், நல்ல காரியத்தை செய்துள்ளனர். நமது நடத்தையே நமது மனநிலையை பிரதிபலிக்கிறது. தூய்மை உணர்வு, ஒரு சமூக நற்பண்பு. இத்தகைய நற்பண்புகள், பணத்தாலோ, கல்வியாலோ வருவது இல்லை. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று கூறியுள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
ஆடம்பர காரில் இருந்தவாறே, மும்பை சாலை ஒன்றில் குப்பை கொட்டியவரை நடிகை அனுஷ்கா சர்மா கண்டித்த காட்சி, சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அக்காட்சியை அவருடைய கணவரும், கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி படம் பிடித்து வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “அனுஷ்கா, விராட்கோலி ஆகியோருக்கு விளம்பரம் தேவை என்றாலும், நல்ல காரியத்தை செய்துள்ளனர். நமது நடத்தையே நமது மனநிலையை பிரதிபலிக்கிறது. தூய்மை உணர்வு, ஒரு சமூக நற்பண்பு. இத்தகைய நற்பண்புகள், பணத்தாலோ, கல்வியாலோ வருவது இல்லை. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று கூறியுள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
பிரபாஸ் - அனுஷ்கா இடையேயான காதல் உண்மை தான் என்றும், அனுஷ்காவை திருமணம் செய்துகொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகிறது. #Prabhas #Anushka
அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது பிரபாசுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.
பிரபாஸ் முடிந்த அளவுக்கு அவர்களது மனதை மாற்ற முயற்சித்தார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அனுஷ்காவுடன் பேசி இருவரும் பிரியும் முடிவை எடுத்துவிட்டார் என்று தெலுங்கு சினிமாவில் தகவல் பரவியுள்ளது. பிரபாசுக்காக காத்திருந்த அனுஷ்காவின் நிலை என்ன ஆகும்? என்பதுதான் பரிதாபம் என்கிறார்கள்.

அனுஷ்காவும் சமீபகாலமாக படங்களில் ஒப்பந்தமாகாமல், திருமண பரிகாரம் செய்ய சில கோவில்களுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhas #Anushka
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கோவில்களை அடிக்கடி சுற்று வருவதற்கு காரணம் வெளியாகியுள்ளது. #Anushka
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வந்தன.
ராணா, ஆர்யா, நாகசைதன்யா என்று பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது. புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த அனுஷ்கா திடீரென்று மீண்டும் படங்களில் பிசியாகி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அனுஷ்காவை முதன்மை கதாநாயகியாக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயன்றுகொண்டிருக்க அவரோ மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதால் தான் திருமணம் தடைபடுகிறது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கோவில் கோவிலாக சுற்றி வருகிறார் அனுஷ்கா என்கின்றன தெலுங்கு வட்டாரங்கள்.