search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apex Legends"

    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அறிமுகமான அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமினை மூன்று நாட்களில் பத்து லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். #ApexLegends



    சர்வதேச கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களான இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்துள்ளன.

    பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். 

    தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. எனினும், பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.



    வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றிருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 2018 வரை ஃபோர்ட்நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் முதற்கட்டமாக கேமிங் கன்சோல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த கேம் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    ×