search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apollo"

    அப்பல்லோவில் சிகிச்சை பெறும் திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். #MKStalin #KAnbazhagan

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    சளித்தொல்லை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சில தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனை சந்தித்தார். அப்போது அவரது உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

    அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் பெற்று வருகிறார். விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். #MKStalin #KAnbazhagan

    ஜெயலலிதா சிகிச்சையில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ விளக்கம் அளித்துள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital


    ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் அளித்துள்ள மனு தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சட்ட விவகார மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-

    அப்பல்லோ நிர்வாகம் மீது ஆணைய வக்கீல் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக எதிர்க்கிறோம்.

    ஆணையத்தில் உள்ள ஒரு வக்கீலே எதிர்தரப்பினர் தொடர்பாக மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது, வழக்கமானது அல்ல.

    ஜெயலலிதாவுக்கு பல்வேறு மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்றுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், டெல்லி எய்ம்ஸ் நிபுணர்கள், ஐ.சி.யூ. சிறப்பு வல்லுனர்கள் என பலரும் இடம்பெற்று இருந்தனர்.

    நிதிஷ்நாயக் தலைமையிலான எய்ம்ஸ் டாக்டர்கள் 3.12.2016 அன்று ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பரிசோதனை மேற் கொண்டனர்.

    அவர்களும் ஜெயலலிதாவுக்கு இதயம் தொடர்பான எந்த ஆய்வும் செய்ய தேவையில்லை என்று கூறி இருக்கிறார்கள். 3 சீனியர் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு இதய ஆஞ்சியோ பரிசோதனை செய்ய பரிந்துரை செய்ததாகவும் ஆணைய வக்கீல் கூறி இருக்கிறார். அது தவறான தகவல்.

    ஒரே ஒரு வெளி டாக்டர் மட்டும்தான் அந்த பரிந்துரையை செய்தார். அதுவும் அவர் முழுமையாக ஆய்வு செய்யாமல் அப்படி கூறி விட்டார்.

    அவரிடம் மற்ற சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரும் ஆஞ்சியோ சிகிச்சை தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

    லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவில்லை.

    இதயத்தை பிளந்து செய்யப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடங்களாக செய்யப்படவில்லை என்று டாக்டர் மதன் குமார் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த டாக்டர் 15 வினாடி என்பதை 15 நிமிடம் என்று தவறாக சொல்லி விட்டார். பின்னர் அவர் அளித்த சாட்சியத்தில் 15 வினாடி என்பதை திருத்தி கொண்டுள்ளார்.

    அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், எக்மோ கருவி பொருத்தப்பட்டதிலும் சர்வதேச தர நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எந்த தவறும் நடக்கவில்லை.

    அது சம்பந்தமான அனைத்து விவரங்களும் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, விசாரணையின் கீழ் இருக்கக் கூடிய ஒரு வி‌ஷயமாக இருக்கின்ற நிலையில், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆதாரம் இல்லாமல் தவறான குற்றச்சாட்டு கூறி இருப்பது சரியல்ல.

    மேலும் சிகிச்சை தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு சரியாக இல்லை. இதனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோகன்குமார் கூறியுள்ளார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத பல்வேறு தகவல்கள் தந்தி டிவி நிகழ்ச்சியின் மூலம் வெளியாகி வருகின்றன. #Jayalalithaa #ThanthiTV
    சென்னை:

    ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வருகிற வெள்ளிக்கிழமை வரை தந்தி டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

    முதல் நாளான நேற்றே ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்களாக அது இருந்தது.

    ஜெயலலிதாவின் சித்தி அமீதா மகள் தெரிவித்த தகவல்கள் உருக்கமாக இருந்தன. ஜெயலலிதாவின் மாமா மகளும் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதா அனாதை போல கிடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். போயஸ் கார்டனில் பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கா? என்று கூறியது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

    ராஜம்மா

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. 2016-ம் ஆண்டு செப். 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றி அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் விவரித்துள்ள பல்வேறு வி‌ஷயங்களும் உருக்கமாக உள்ளன.

    கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களுள் ஒன்றாகும். அங்கு சென்று ஓய்வு எடுப்பதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். அந்த எஸ்டேட் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

    2-வது நாளாக இன்று இரவு 9 மணிக்கு ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவின் தினசரி வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது ருசிகர தகவல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டம் இல்லத்தில், பல்வேறு அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இது மட்டுமே பலருக்கு தெரியும்.

    ஆனால் ஜெயலலிதா தனது இல்லத்தில் பண்டிகைகளையும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி உள்ளார். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர் சந்தோ‌ஷத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

    ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான அந்த தருணங்களை கண்முன்னே நிறுத்தும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் இனிமையான நிகழ்வுகள் நினைவு அலைகளாக விரிகின்றன.

    ஜெயலலிதாவை பொறுத்தவரையில் மிகவும் தைரியமான பெண் ஒன்று பெயரெடுத்தவர். எதற்கும் பயப்படமாட்டார் என்பதை உணர்த்தும் வகையில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட பயந்து நடுங்கி உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவோ அந்த பாம்பை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் இருந்துள்ளார். அந்த சம்பவமும் இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.

    செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஜெயலலிதா. குரங்குகள், நாய்க்குட்டிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்துள்ளார்.

    வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி திடீரென இறந்து போனதால் தனது டெல்லி நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதுபற்றிய தகவல்களும் நிகழ்ச்சியில் பாசமழையாக பொழிய உள்ளது.

    அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா முதன்முதலில் பேசிய வார்த்தை என்ன? என்பது அனைவரது மனதிலும் இப்போது வரையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கும் இன்றைய நிகழ்ச்சி விடை தருகிறது.

    கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி தரிசனம் செய்த போது ஒரு முறை சன்னதியில் கதறி அழுதுள்ளார்.

    சந்தோ‌ஷமான தருணம் ஒன்றில் கருணாநிதி குரலிலும் ஜெயலலிதா மிமிக்ரி செய்து பேசிக் காட்டியுள்ளார். இதன் மூலம் அவரது மிமிக்ரி ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டியவர் ஜெயலலிதா. மோடிக்கு அவர் அளித்த விருந்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

    இனிப்பு வகைகள் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இரவில் குறிப்பிட்ட இனிப்பு ஒன்றை அவர் விரும்பி கேட்டு சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். அது என்ன இனிப்பு? ஜெயலலிதாவின் விருப்ப உணவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் ஆச்சரியமூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது.

    தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவின் வாழ்வில் யாரும் அறிந்திராத இன்னொரு பக்கத்தை பார்க்க முடிகிறது என்றால் அது மிகையல்ல.

    இதே போல நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் 6, 7-ந்தேதிகளில் வர இருக்கும் நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.

    இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு மறுநாள் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. #Jayalalithaa
    அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் வாக்குமூலத்தால், ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகி உள்ளது. #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.



    ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 22.9.2016, 23.9.2016 ஆகிய தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் ராமசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். 24.9.2016 முதல் 1.10.2016 வரை அவர் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு பதிலாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் நோய் தொற்றுக்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அவர் தனது வாக்குமூலத்தில், ‘15.11.2016 அன்று ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக சரியாகி விட்டது’ என்று கூறி உள்ளார்.

    நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அளித்த இறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், நோய் தொற்று தொடர்பாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையில் பஞ்சாபிகேசன் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இதனால், ஜெயலலிதா இருந்த அறை குறித்து அவரிடம் ஆணையம் தரப்பு வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘ஜெயலலிதா இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்’ என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ‘திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மரணத்துக்கு பின்னர் வெளியானது. அதில், அவர் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியில் திரைச்சீலை இருக்காது, அந்த கண்ணாடி வழியாக மரம் மற்றும் செடிகள் தெரியும்.

    ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா? என்ற குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் டெக்னீசியன் பஞ்சாபிகேசனின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Jayalalithaa #JayaDeath
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் விசாரணை செய்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்திருந்தது.

    இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசரகதியில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் சந்தேகிக்கிறது.

    அப்பல்லோ மருத்துவமனையின் ஆவண பாதுகாவலரை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×