என் மலர்
நீங்கள் தேடியது "Apple"
- ஆப்பிள் நிறுவத்தின் ஆப்பிள் வாட்ச் மாடல் சர்வதேச ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
- ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ள பாதுகாப்பு அம்சம் பற்றிய உண்மை சம்பவங்கள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.
ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில், இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருத்தர் 150 அடி ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 7 மூலம் அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.
இந்திய இளைஞர் ஸ்மித் மேத்தா என்பவர் ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அவரை மீட்க உதவி இருக்கிறது. மிகவும் கோரமான ஆபத்தில் சிக்கி, ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அந்த இளைஞர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மித் மேத்தா தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களுடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இவருடன் மூன்று நண்பர்கள் சென்று இருந்தனர். மலை ஏற்றம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விட்டார்.
எனினும், கீழே விழும் போது மரம் மற்றும் பாறை மீது விழுந்ததில் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்து இருக்கிறார். கடுமையான வலியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை அவரது நண்பர்கள் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றினர். பின் காயமுற்ற இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்காக டிம் குக், ஸ்மித் மேத்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையான விஷயம் தான்.
- முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் துவங்கி, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பலரும் ஐபோன்களுக்கு திடீர் சலுகை அறிவிப்பர்.
இந்திய சந்தையில் ஐபோன் 12 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி ஆன்லைன் விற்பனையாளரான ப்ளிப்கார்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 130 அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. முன்னதாக ஐபோன் 12 மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐபோன் 12 மாடலுக்கு தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 (64 ஜிபி) விலை தற்போது ரூ. 48 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதி ஐபோன் 12 விலை ரூ. 56 ஆயிரத்து 129 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 2020 அக்டோபர் மாத வாக்கில் ஐபோன் 12 மாடல் ரூ. 79 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 12 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் மதிப்பு ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அது எந்த அளவுக்கு சீராக இயங்குகிறது என்பதை பொருத்து வேறுபடும்.
இவை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 64 ஜிபி மட்டுமின்றி ஐபோன் 12 128 ஜிபி, 256 ஜிபி மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 53 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு கிளாஸ், ஏ14 பயோனிக் பிராசஸர், டூயல் 12MP கேமரா சென்சார்கள், 12MP செல்ஃபி கேமரா, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஐபோன் 12 மாடலுடன் யுஎஸ்பி சை டு லைட்னிங் கேபிள் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் சீரிசாக ஐபோன் SE விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஆப்பளின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-இல் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆப்பிள் ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் இது ஏராளமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் SE மாடல்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தன. இவற்றின் விற்பனையும் அதிகளவிலேயே நடைபெற்று வந்தது.

தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இந்த நிலை விரைவில் மாறும். அதன்படி புதிய ஐபோன் SE சீரிஸ் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதன் தோற்றம் ஐபோன் XR போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் SE மாடலில் ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்படலாம்.
இத்துடன் 6.1 இன்ச் 720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, IP67 சான்று, 3000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம். இதே பிராசஸர் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ சீரிசில் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 7MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
- ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- தற்போது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஐபோன் 14 (128ஜிபி) மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், அமேசான் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 78 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 73 ஆயிரத்து 400 என குறைந்து விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 16 ஆயிரத்து 300 வரை தள்ளுபடி பெறலாம். எனினும், இதற்கு பழைய போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெறும் படச்த்தில் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 57 ஆயிரத்து 100 என மாறி விடும்.

ஐபோன் 14 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.
- ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
- ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.
ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.
தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
- ஐபோன் மாடல்களுக்கு தேவையான பாகங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.
சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் OLED சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் சாம்சங்கின் OLED பேனல்களை தனது ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. OLED மட்டுமின்றி ஐபோனில் உள்ள மேலும் சில பாகங்கள் சாம்சங் போன்று மூன்றாம் தரப்பு நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுக்கின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 சீரிசில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே பேனல்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சாம்சங் உற்பத்தி செய்தவை என தெரியவந்துள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களில் வழக்கமான பேனல்களும், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் LTPO டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது முதன்மை சீரிசில் 120 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சுமார் 80 மில்லியன் யூனிட்களில் சாம்சங் பேனல், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட யூனிட்களில் LG டிஸ்ப்ளே வழங்கும் ஸ்கிரீன்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர BOE பேனல்கள் 6 மில்லியன் யூனிட்களில் வழங்கப்பட இருக்கிறது.
மீதமுள்ள யூனிட்களுக்கு யார் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குவது என்ற முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளே ஐபோன் 14 சீரிசின் நான்கு வேரியண்ட்களுக்கும் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குகின்றன. BOE வழங்கும் பேனல்கள் ஐபோன் 14 மாடலில் உள்ள 6.1 இன்ச் LTPS OLED-க்கள் ஆகும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவது சமீபத்தில் அம்பலமாகி இருக்கிறது.
- புதிய ஆப்பிள் மேக் சாதனம் M2 மேக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை மேக் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய சாதனங்கள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என புளூம்பர்க் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருந்தார். புது மேக் மாடல்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இதுவரை ஆப்பிள் அறிவிக்காத M2 மேக்ஸ் பிராசஸர் கொண்ட புது மேக் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீக்பென்ச் 5 டேட்டாபேசில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மேக் மாடல் "Mac14.6" எனும் பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஆப்பிள் M2 மேக்ஸ் CPU கொண்டிருக்கும்.

பென்ச்மார்க்கிங் வலைதள விவரங்களின் படி M2 மேக்ஸ் பிராசஸரில் 12-கோர் CPU, 3.54GHz மற்றும் 96 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் சிங்கில் கோரில் 1853 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 13 ஆயிரத்து 855 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. மேக்புக் ப்ரோ மாடலில் உள்ள M1 மேக்ஸ் பிராசஸரில் 10-கோர்கள், 3.2GHz டியூனிங்கில் இயங்குகின்றன. இவை சிங்கில் கோரில் 1746 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 12 ஆயிரத்து 154 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கீக்பென்ச் முடிவுகளின் படி புதிய M2 மேக்ஸ் பிராசஸர் அதன் முந்தைய வெர்ஷனை விட 14 சதவீதம் வேகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய M2 மேக்ஸ் முந்தைய M1 மேக்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த M2 சிப் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரின் வேகம் மற்றும் செயல்திறன் அசாத்தியமாகவே உள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல்கள் உற்பத்தி சீனா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
- ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
சாதனங்களை உற்பத்தி செய்ய சீனாவை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தியை பெருமளவு இந்தியாவுக்கு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன்களை போன்றே ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்து முடிக்க ஏராளமான தடைகளை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் மிக முக்கியமானது ஐபேட் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களை தயார்படுத்துவதும் ஆகும். அந்த வகையில், இதனை சாத்தியப்படுத்துவது பற்றி இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை.
தனது சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றுவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இடையூறுகளை சரி செய்த பின் ஐபேட் உற்பத்தி இங்கு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 முதல் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வந்தது. பின் மெல்ல உற்பத்தி பணிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
- இதே போன்று ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற சாதனங்கள் பிரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து அதிரடியான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே ஏர்பாட்ஸ் ப்ரோ 2 விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 2 கோடியே 38 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் 30.9 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனம் 34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவற்றில் சுமார் 42 லட்சம் யூனிட்கள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ஆகும். இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடல் இந்த காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
- தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.
எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.
இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அதன் கேமராவுக்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கிறது.
- இந்த நிலையில், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கேமரா சென்சார் பற்றிய புது தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வோர் விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படும், இதே நிலை அவற்றின் தொழில்நுட்ப விவரங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், சோனி நிறுவன ஆலைக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இது சந்தையில் மிகவும் அரிதான காரியமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்களும் தொடர்ந்து மௌனம் காத்து வந்தன. இந்த நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக டிம் குக் தெரிவித்தார்.

இத்துடன் சோனி நிறுவன தலைமை செயல் அதிகாரி கெனிசிரோ யோஷிடாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிம் குக் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சோனி உற்பத்தி ஆலையில் எடுக்கப்பட்டதாக டிம் குக் குறிப்பிட்டு இருக்கிறார். பேட்டரி, சிப் மற்றும் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் ஆப்பிள் மர்மமாகவே வைத்திருக்கிறது. எனினும், வினியோக துறையை சார்ந்தவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முன்புறம் மற்றும் பின்புற கிளாஸ் ஷீட்களை கார்னிங் நிறுவனம் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் பெரும்பாலான OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. ஆப்பிள் பயன்படுத்தும் சிப்செட்களை TSMC உற்பத்தி செய்து கொடுக்கிறது. சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே கேமரா ஹார்டுவேர் பற்றிய ஒப்பந்தம் அதன் தோற்றத்தை பொருத்து இதுவரை உறுதுப்படுத்தாமலேயே இருக்கிறது. மேலும் இது பற்றிய உறுதியான தகவல் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
இது தவிர சோனி நிறுவனம் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களை கொண்டு புது சென்சார் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகம் மற்றும் குறைந்த வெளிச்சத்தை அனுமதிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சென்சார் நிச்சயம் எதிர்கால ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் அம்சம் சரியான நேரத்தில் கணவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பி இருக்கிறது.
- ஐபோன் 14, வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல்களில் கிராஷ் டிடெக்ஷன் கொடுக்கும் மேம்பட்ட சென்சார்கள் உள்ளன.
ஐபோன் 14 மாடலின் கிராஷ் டிடெக்ஷன் அம்சம் நபர் ஒருவருக்கு தனது மனைவி விபத்தில் சிக்கிய தகவல் கொடுத்தது. இதையடுத்து கணவர் சரியான நேரத்தில் விபத்து பகுதிக்கு விரைந்ததால், மனைவி உயிர்பிழைத்தார். இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
கடைவீதிக்கு சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது, திடீரென கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தில் சிக்கியதால் அலறி இருக்கிறார். இதோடு அவரின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்று இருந்தது. நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். ஆம்புலன்ஸ் வரும் முன் சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். கிராஷ் டிடெக்ஷன் அம்சம் எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது.
ஹெல்த் ஆப்-னுள் பயனர்கள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களில் கிராஷ் டிடெக்ஷன் அம்சத்தை வழங்கும் மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்டறிந்து செயல்படுகிறது.