என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » arappor iyakkam
நீங்கள் தேடியது "Arappor iyakkam"
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #MadrasHC
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் அவதூறு பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் என வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இதேபோல தடை கோரி ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 8-ந் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணை தள்ளிவைத்தார். #MadrasHC

2006 முதல் 2017 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #OPanneerSelvam
சென்னை:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 6 மாதமாக அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘6 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வழக்கு கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.
போலீசில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது.
இந்தநிலையில் 2006 முதல் 2017 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் அந்தப் புகாரை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்தார்.
அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார். இதுபற்றி ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:-
2006-லிருந்து 2017 வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் கொடுத்துள்ளோம்.
2006-ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் ரூ.20 லட்சமே தன்னுடைய சொத்துக் கணக்கு என கணக்குக் காட்டியவர் எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம்.
மேலும் நான்கு மரைன் டிரான்ஸ் போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்து தான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனவும் கேள்வி எழுப்பினோம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர் செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? அவருடைய பின்னணி என்ன? சொத்துக்கள் விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
மேலும் அவருடைய பினாமிகளாக ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தச் சொத்துக்கள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே. அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.
கடந்த டிசம்பர் மாதமே கொடுத்த இந்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு போடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (திங்கள்) விசாரணைக்கு வருகிறது. #OPanneerSelvam
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 6 மாதமாக அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘6 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வழக்கு கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். மீது அறப்போர் இயக்கம் சார்பில் மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
இந்தநிலையில் 2006 முதல் 2017 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் அந்தப் புகாரை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்தார்.
அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார். இதுபற்றி ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:-
2006-லிருந்து 2017 வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் கொடுத்துள்ளோம்.
2006-ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் ரூ.20 லட்சமே தன்னுடைய சொத்துக் கணக்கு என கணக்குக் காட்டியவர் எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம்.
மேலும் நான்கு மரைன் டிரான்ஸ் போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்து தான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனவும் கேள்வி எழுப்பினோம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர் செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? அவருடைய பின்னணி என்ன? சொத்துக்கள் விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
மேலும் அவருடைய பினாமிகளாக ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தச் சொத்துக்கள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே. அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.
கடந்த டிசம்பர் மாதமே கொடுத்த இந்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு போடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (திங்கள்) விசாரணைக்கு வருகிறது. #OPanneerSelvam
×

X