என் மலர்
நீங்கள் தேடியது "Aries Rasi"
- குரு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
- கோவில்களில் மக்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இன்று மாலை சரியாக 5.19 மணிக்கு இடம்பெயர்ந்தார்.
குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்த பெற்ற குரு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார கோயில்களில் சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, ஆலங்குடி குரு பகவான் கோயில், திட்டக்குடி குரு கோயில், ஆவடி அருகே பாடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
கோவில்களில் மக்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.