என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ariyavan"
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியவன்’.
- இப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' 'திருச்சிற்றம்பலம்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில் கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரியவன்'.
அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இசை மற்றும் பாடல் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சமீபத்தில் நடைபெற்றது.
அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ் பேசியதாவது, "அரியவன் படம் டிரைலர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துகள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
இயக்குனர் மித்ரனுடன் 'உத்தம புத்திரன்' படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.
அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது, " இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குனர் மித்ரன் ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குனர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.