search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun Doss"

    • அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'
    • அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.

    டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ், "இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோலதான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார்."

    "தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்," என்று தெரிவித்தார்.

    இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் மூலம் பெரிய நடிகருடன் வேலை செய்ய இருக்கிறேன்.
    • அநீதி படத்திற்கு பிறகு கிடைத்த ஆதரவுக்கு நன்றி.

    GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார். வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.

     

    பூஜையை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ''இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய நடிகருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்."

    "விஷால் வெங்கட் மதுரைக்கு வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி,'' என்று தெரிவித்தார்.

    ×