search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army jawan"

    ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக இருக்கும் முக்தார் அஹ்மது மாலிக், விபத்தில் இறந்த தனது மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியாற்றி வந்தார். முக்தாரின் மகன் சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், விடுப்பு எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், நேற்றிரவு முக்தாரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இமாச்சலா பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாமில் சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து வீரர் ஒருவர் தாமும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HimachalPradesh #ArmyJawanSuicide
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள ராணுவ வீரர்களில் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கியால் தனது இரு சக ராணுவ நண்பர்களை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த ராணுவ வீரரும் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்ததை உறுதி செய்தனர்.

    இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகவும், ராணுவ வீரரின் இந்த நடவடிக்கைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HimachalPradesh #ArmyJawanSuicide
    பெண் பார்க்க சென்று பெண்ணை பிடித்துப் போய் கல்யாண கனவுடன் இருந்த ராணுவ வீரரை பிடிக்கவில்லை என பெண் வீட்டார் கூறியதால், மனம் உடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெவுலாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். ராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். மகனுக்கு திருமண செய்து பார்க்க நினைத்த பெற்றோர் சமீபத்தில் ஒரு பெண்ணை பார்க்க சென்றுள்ளனர்.

    பெண்ணை வினோத் குமாருக்கு மிகவும் பிடித்து போனது. ஆனால், பெண் வீட்டார் வினோத் குமாரை பிடிக்கவில்லை என கூறிவிட்டனர். இதனால், மனம் உடைந்து போன வினோத் குமாரிடம், வேறு பெண்ணை பார்க்கலாம் என அவரது தந்தை சமாதானம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், பெண்ணை மிகவும் பிடித்து போய் திருமண கனவில் இருந்த வினோத் குமார், அதே பெண்ணை தான் திருமணம் செய்வேன் என கூறி தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை ரெயில் முன்னர் பாய்ந்து வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அக்னூர் என்ற இடத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உதாம்பூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    எல்லைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் படுகாயம் அடைவது இது 2-வது தடவை ஆகும். கடந்த 7-ந் தேதி இதே மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  #tamilnews 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ArmyManDead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் நீரஜ் குமார் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சலாரி பாதல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அவரது வீட்டின் அருகே நீரஜ் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ராணுவ அதிகாரியின் மர்ம மரணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ராணுவ வீரர் நீரஜ் குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

    சமீபத்தில் இதேபோல் விடுமுறைக்குச் சென்ற ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.#ArmyManDead
    ஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.  #JKEncounter
    ×