search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army patrolling"

    வங்காளதேசத்தில் நாளை மறுதினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #BangladeshGeneralElection
    டாக்கா:

    வங்காளதேசத்தில் டிசம்பர் 30-ம் தேதி (நாளை மறுதினம்) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஷேக்  ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இதற்கிடையே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள  தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத் தேர்தலை சீர்குலைக்க  முயல்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள  தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள்  புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
    #BangladeshGeneralElection
    ×