என் மலர்
நீங்கள் தேடியது "army soldier killed"
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். #JammuKashmir #PakistanCeasefire
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் படைகள் சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கிகளை கொண்டு இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை உடனே ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரி வகார் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JammuKashmir #PakistanCeasefire
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #KupwaraEncounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் கச்சூ கிராமத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ராம் பாபு சஹாய் என்ற ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறியும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #KupwaraEncounter
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார். #KashmirBlast
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. அங்குள்ள ரஸ்டம் சோதனை சாவடியில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். #KashmirBlast