என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arun"
- புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
- துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி, புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.
கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் தொடர்புடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இனி எதுமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை வழங்கியதாக தகவல்.
இதுதவிர ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
- சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.
இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.
தி பாய்ஸ் போஸ்டர்
வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
- சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
- மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்
சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.
மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.
சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.
இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.
இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!
இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
- இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் 'யானை'.
- யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'யானை' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்