என் மலர்
நீங்கள் தேடியது "Arvind Swamy"
மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. #CCV
மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்‘.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்ததாலும் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வரும் ஆக்ஷன் படம் என்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு உண்டானது. படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் 3 நாட்களாக திரையரங்குகள் நிரம்பி வருகின்றன.
‘செக்கச்சிவந்த வானம்’ படம் முதல் நாளே 8.05 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. படத்தின் வெற்றி தொடர்வதால் அடுத்தடுத்து வருவதற்கு திட்டமிட்டிருந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் விமர்சனம். #CCV
சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.
பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்படுகிறார்.

இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார்.
அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் மூத்த மகனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனே பயணிக்கும் இவர், நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மூன்றாவது மகன் சிம்பு, இளமை துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அரவிந்த் சாமியின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் ஜோதிகா, ரிப்போர்ட்டராக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தாதாவான தந்தை இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு, கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ செம வெயிட்.
சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #SathurangaVettai2 #ArvindSwami
நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwami
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Kallapart #ArvindSwamy
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
`என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra
`சதுரங்க வேட்டை-2' படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூ. 1.79 கோடியை பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்து வழக்கு விசாரணையில் மனோபாலாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwamy
நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை'.
இதன் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட ஐகோர்ட்டு வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று தெரிய வரும். #SathurangaVettai2 #ArvindSwamy
செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும் பேசினார்கள்.

பின்னர் வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே...’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து, ரசித்து கேட்ட பாடல் என்று கூறினார்.
செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சிம்பு, மேடையில் பேசாமல் ஓடிவிட்டார். #CCV #ChekkaChivanthaVaanam #STR
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
அதன்பின் அரவிந்த்சாமி, அருண்விஜய், அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும், மணிரத்னம் பற்றியும் பேசினார்கள்.

பின்னர் மேடையேறிய சிம்பு, ‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன் என்று மேடையில் பேசாமல் ஓடிவிட்டார்.
செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அருண் விஜய், அவரைப் பற்றி நினைத்து வேறு, ஆனால் நிஜத்தில் வேறு என்று பேசியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
இதில் அருண் விஜய் பேசும்போது, ‘செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் சிறந்த அனுபவம். எல்லா நாட்களும் ஒவ்வொரு புது விஷயம் கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்க போறேன் என்று சந்தோஷம் இருந்தாலும், முதலில் டென்ஷனாக இருந்தது. ஆனால் மணி சாரை பார்த்தவுடன் அந்த டென்ஷன் போய்விட்டது. இருந்தாலும் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது அரவிந்த் சாமிதான். இந்த படத்தில் தியாகு கதாபாத்திரம் கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவரைப் பற்றி நான் நினைத்து வேறு. கேமரா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஆக்ஷன் என்று சொல்லுவார் என்று நினைத்தேன். ஆனால் வித்தியாசமாக அருகில் வந்து என்ன செய்ய வேண்டும் எப்படி என்று நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.

என்னுடன் நடித்திருக்கும் சிம்பு திறமையான நடிகர். சிறுவயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படத்தின் மூலம் நல்ல மனிதர் என்பதை தெரிந்துக் கொண்டேன். அதுபோல், நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பிலும், நிஜத்திலும் யதார்த்தமானவர். எப்போது அப்படியே இருக்க வேண்டுகிறேன்’ என்றார்.
செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அரவிந்த் சாமி, மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
அதன்பின் அரவிந்த் சாமி பேசும்போது, நான் மணி ரத்னத்தின் 6 படங்களில் நடித்திருக்கிறேன். இருவர் படத்தில் பாடி இருக்கிறேன். உயிரே படத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன். மொத்தம் 8 படங்களில் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படத்தில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் இயக்கிய மற்ற 12 படங்களில் என்னை ஏன் நடிக்க வைக்க வில்லை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதிதி ராவ் பேசும்போது, காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் லக்கி. அரவிந்த்சாமியுடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படம், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றுள்ளார் என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியிருக்கிறார். #CCV #ARRahman ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
அதன் பிறகு பேசிய அவர், இந்தப் படம் மணிரத்னம் சார், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றிருக்கிறார் என்று பேசினார்.
சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...
நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?
இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.
இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?
மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.

நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?
இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.
இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?
இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.
இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?
நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.
பெண் இயக்குனர்கள் பற்றி?
நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.
அடுத்தடுத்த படங்கள்?
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வரதன் முதல் பார்வை நேற்று வந்த நிலையில், இன்று தியாகு வெளியாகி இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.
ஆனால், அரவிந்த்சாமியின் கதாபாத்திரமான வரதன் முதல் பார்வை மற்றும் வெளியானது. இன்று அருண் விஜய்யின் தியாகு கதாபாத்திரன் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது. நாளை விஜய் சேதுபதி அல்லது சிம்பு கதாபாத்திரத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Arun Vijay as Thyagu in #ChekkaChivanthaVaanam!#CCV#ManiRatnam@arunvijayno1@LycaProductions@thearvindswami#Simbu#STR#VijaySethupathi@prakashraaj#Jyotika@aditiraohydari@aishu_dil@DayanaErappa@salamsir21@arrahman@santoshsivan#MansoorAliKhan#Jayasudhapic.twitter.com/oFQ4JTTC6G
— Lyca Productions (@LycaProductions) August 14, 2018
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV