search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Champions Cup Hockey"

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது
    • முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5 ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    இதற்கு முன்பு இந்தியா 2011, 2016, 2018, 2023, ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 எனற கணக்கில் சாமானில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பின்னர் நடத்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 - 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது. 

    • இந்தியா மோதிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
    • புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் 2-ம் இடமும் தென்கொரியா 3-ம் இடமும் பிடித்துள்ளது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

    சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் 2-ம் இடமும் தென்கொரியா 3-ம் இடமும் பிடித்துள்ளது.

    2016 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியது.
    • இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது.

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. இப்போட்டி மதியம் 1.15 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது.

    • இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ஹூலுன்பியர்:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.

    இதனால் இந்தியாவின் தாக்குதல் யுக்தியை சமாளிக்க ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்களின் கோல் மழை ஓயவில்லை. 17-வது நிமிடத்தில் சஞ்சய், 54-வது நிமிடத்தில் உத்தம்சிங், 60-வது நிமிடத்தில் மறுபடியும் சுக்ஜீத் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையே ஜப்பான் தரப்பில் மோட்சுமோட்டோ 41-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

    முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் அபிஷேக் கூறுகையில், 'இது அணியின் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, இலக்கை சரியாக எட்டினோம். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்தது. பாகிஸ்தான்- தென்கொரியா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதே மலேசியாவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார்.
    • அவருக்கு பதிலாக புதிய கோல் கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்.8-ந்தேதி சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

    இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடருகிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதை அடுத்து எதிர்பார்த்தபடியே பிரதான கோல்கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார். மாற்று கோல் கீப்பராக சுரஜ் கர்கெரா அங்கம் வகிக்கிறார்.

    நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடிய ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், ஷம்ஷெர்சிங், குர்ஜந்த் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றிருந்த 10 வீரர்கள் நீடிக்கின்றனர்.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதாக், சுரஜ் கர்கெரா, பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது, ரஹீல் முசீன், முன்களம்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.

    • இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை வகித்தது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 3 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.
    • ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.

    இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
    • இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×