search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attack on police"

    • 2 வாலிபர்கள் கைது
    • மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகளிடம் தகராறு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மதுகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் அருகே தேசிய நெடுஞ் சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    அப்போது புத்துகோவில் மேம்பாலம் அருகே மதுஅருந்திக் கொண்டிருந்த சில இளைஞர்கள் சாலையில் வருவோர் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் மதுகுமார். வினோத்குமார் ஆகியோர் மதுபோதையில் இருந்த 4 இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து புத்துகோவில் பகுதியை சேர்ந்த பூவரசன் (24), தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த வசந்த் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • தாக்கிய அண்ணன்- தம்பி கைது
    • ஒருவழி பாதையில் வந்ததால் தகராறு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகு தியை சேர்ந்தவர் தாகூர் சுந்தர் (வயது 49). ஊர்க் காவல் படை வீரரான இவர் நேற்று முன்தினம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட் டிருந்தார்.

    அப்போது ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (28) என்பவர் ஒருவழிப் பாதையில் ஆட்டோவை ஓட்டி வந்தார். இதனை தாகூர் சுந்தர் தட்டிக் கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . வாக் குவாதம் முற்றி ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் ( 30 ) ஆகிய இருவரும் சேர்ந்து தாகூர் சுந்தரை ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக் குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. மேற்கு வங்காள மாநிலத

    கொல்கத்தா:

    நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

    ஹவுரா மாவட்டம் பஞ்சலா பசார் பகுதியில் இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இங்கு போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். இதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    அங்கு இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதே போல் 13-ந் தேதி காலை 6 மணி வரை இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

    மக்கள் பொய்யான தகவலை நம்பி கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே டெல்லி ஜூம்மா மசூதிக்கு வெளியே நடந்த போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பெரம்பலூர் அருகே விநாயகர் சிலையை எடுத்து சென்ற போலீசார் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் 3 பிரிவினருக்கு இடையே பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள யாரும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என பாடாலூர் போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் போலீசாரின் தடையை மீறி, அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வைக்க கடந்த 13-ந்தேதி கொண்டு வந்தனர். அப்போது விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்று போலீசார் தடுத்தனர். அதையும் மீறி பாடாலூரில் சிலையை வைத்தனர்.

    இதையடுத்து பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், விநாயகர் சிலையை வைத்த பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்சினைக்குரிய பாதையில் கொண்டு செல்லாமல், மாற்று வழியில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றனர்.

    இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, வழக்கமான பாதையில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களிடம், போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் செல்லுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் சங்குபேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, அன்று இரவு விடுவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று பிரச்சினைக்குரிய விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம். வழக்கமான பாதையில் தான் எடுத்துச் செல்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் 3 பிரிவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார், தாங்களே அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டத்தூர் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களையும் வீசினர். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் பெண் போலீசார் தங்க பானு, சூர்யா உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

    கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாடாலூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ×