search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "audio clip"

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.
     
    இதற்காக கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

    இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

    அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.

    மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார்.  பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.

    அந்த ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்ப உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா நேற்று திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும். 15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் வலியுறுத்தினார்.

    இதைதொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதல் மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
    “ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. மகனுடன் பேரம் பேசிய விவகாரத்தில் ஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல்தான்” என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார். #Yeddyurappa #VoiceAudio
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.

    இதற்காக கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

    ஆனால் அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.

    அத்துடன், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார். மேலும் பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.

    இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்பவும் உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் தங்கியிருந்த இடத்திற்கு என்னிடம் பேச குமாரசாமி, குருமித்கல் தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வின் (நாகன கவுடா) மகனை நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பினார். அவர் என்னிடம் வந்து பேசியது உண்மைதான். நாங்கள் பேசிய உரையாடலில் தேர்வு செய்து சில பேச்சுகளை மட்டுமே குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது எனது குரல் தான்.

    குமாரசாமி தரம் தாழ்ந்த, மிரட்டல் போக்கு கொண்ட அரசியலை செய்கிறார். அதில் சில உண்மைகளை மூடி மறைத்துவிட்டனர். நாங்கள் உண்மையாகவே என்ன பேசினோம் என்பது பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியே வரும்.

    சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார்.

    ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா, ஜனதா தளம் (எஸ்) கட்சியில் ‘சூட்கேசு கொடுக்காவிட்டால் எந்த வேலையும் நடைபெறாது’ என்று சொந்த கட்சி மீதே குற்றம்சாட்டினார்.

    இதுதான் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் உண்மை முகம். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தொடர்ந்து சதிசெய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.
     
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜ.க. காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரி குமாரசாமி சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



    இந்நிலையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

    முதல் மந்திரி குமாரசாமி கர்நாடக மாநிலம் தென்பகுதியில் அமைந்துள்ள புனிதத்தலமான தர்மஸ்தலாவுக்கு இன்று சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன். அந்த ஆடியோவில் எடியூரப்பாதான் பேசியுள்ளார். அவர் தான் பேசவில்லை, அது மிமிக்ரி என்பதை நிரூபிக்கட்டும். நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    கர்நாடகாவில் இன்று எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaFloorTest #Yeddyurappaaudio
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சிபொறுப்பை ஏற்றதில் இருந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜ.க.வின் உச்சகட்ட பேரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலுடன் முதல்வர் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.



    அதில், பாட்டீலுக்கு அமைச்சர் பதவியுடன் நீங்கள் கேட்டதை தருகிறோம் என்று எடியூரப்பா கூறுவதுபோல் உள்ளது. மேலும் 3 பேரை அழைத்து வாருங்கள் என்றும் எடியூரப்பா கூறுகிறார். இந்த ஆடியோ விவகாரம் அரசியலில் புதிய புயலைக் கிளப்பி உள்ளது.

    ஏற்கனவே எடியூரப்பாவிற்காக ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #KarnatakaFloorTest #Yeddyurappaaudio

    ×