என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » auto symbol
நீங்கள் தேடியது "Auto symbol"
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate #Auto
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள என் ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதான் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate #Auto
×

X