என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avalanche"

    • மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
    • பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.

    சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10-ந் தேதி திறக்கப்பட்டது.

    அப்போது முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.

    கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகின.

    • சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது பனிச்சரிவு.
    • 10 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 47 பேர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மணா அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணா கிராமம் இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது.

    பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பனிப்பாறைகள் சரிந்து அவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    இந்திய வானிலை மையம் உத்தரகாண்ட் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தோ-திபெத் எல்லையில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
    • தற்போது வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உத்தரகாண்டில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 49 பேர் உயிருடன் மீட்கப்பட் நிலையில் 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமம் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய-திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த மலை கிராமத்தில் எப்போதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் அங்குள்ள சாலைகளில் பனித்துனிகள் குவிவது வழக்கம்.

    திபெத் எல்லையை நோக்கி ராணுவம் நகர்வதற்கான முக்கிய பாதை என்பதால் சாலைகளில் குவியும் பனியை அகற்றுவதற்காக எல்லை சாலைகள் அமைப்பை (பிஆர்ஓ) சேர்ந்த தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே முகாம்களை அமைத்து தங்கி, பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. இதில் முகாமில் இருந்த 57 தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

    இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    இதற்கிடையில் முதலில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறையில் சிறிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.

    இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக பனிச்சரிவில் சிக்கிய 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மனா கிராமத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    இதனிடையே பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஏற்கனவே கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் மழையும் பெய்ய தொடங்கியது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மீட்பு குழுக்கள் மெதுவாக அதேவேளையில் பாதுகாப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடும் சவால்களுக்கு மத்தியில் மாலை நேரத்தில் மேலும் 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களும் உடனடியாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிய நிலையில் நேற்று இரவு வரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று 17 பேர் மீட்க்கப்பட்டனர். மதியம் வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று மீட்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    5 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநில முதல்வர் பூஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு சென்று பனிச்சரிவு நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் மீட்புப்பணி குறித்து கேட்டறிந்தார்.

    பிரதமர் மோடி, தாமியை டெலிபோனில் தொடர்பு கொண்டு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார்.

    காஷ்மீர் பனிச்சரிவிற்குள் சிக்கியவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வானிலை இலாகா கூறியிருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.



    இந்த பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #Kashmir #Avalanche
    காஷ்மீர் பனிச்சரிவுக்குள் 10 பேர் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    நேற்று காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக நேற்று வானிலை இலாகா கூறி இருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.

    பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பனிச்சரிவுகள் இருப்பதால் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.



    இதற்கிடையே மேலும் பல பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படலாம் என்று லே மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    லே மாவட்டத்தில் இன்று மைனஸ் 15.6 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவியது. கார்கில் பகுதியில் மைனஸ் 19.2 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலை காணப்பட்டது.

    அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.  #Kashmir #Avalanche
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Avalanche #Armyjawandies
    ஸ்ரீநகர்:

    வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் இருந்து கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
     
    ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் பணியில் இருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதில், ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் 
    தெரிவித்தனர். #JammuKashmir #Avalanche #Armyjawandies
    பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #PakistanAvalanche #BritishClimbers
    இஸ்லாமாபாத்:

    பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் புரூஸ் நார்மண்ட் மற்றும் டிமோதி மில்லர். இருவரும் மலையேற்ற வீரர்கள். ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் உபேர் என்ற வீரருடன் நேற்று மலையேற்ற பயிற்சிக்காக பாகிஸ்தான் வந்தனர்.

    இவர்கள் சுமார் 19,000 அடி தொலைவுள்ள ஹன்சா சமவெளியில் உள்ள அல்டார் சர் மலையில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்தனர்.



    தகவலறிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து வந்தது. அவர்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் வீர்ர்கள் இருவரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
     
    மேலும், பனிச்சரிவில் சிக்கிய ஆஸ்திரேலிய மலையேற்ற வீரர் கிறிஸ்டியன் உபேர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். #PakistanAvalanche #BritishClimbers
    ×