என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "avatar 2 the way of water"
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்படம் இன்று (டிசம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அவதார் -2
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது.
அவதார் -2
இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளப் பக்கதில் அவதார் புகைப்படத்தை பகிர்ந்து, " அசுர உழைப்பு அதிருது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அசுர உழைப்பு….🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏… அதிருது….❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/nT6M8GMr4m
— P.samuthirakani (@thondankani) December 16, 2022