search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avial"

    செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல... டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்திரிக்காய் - 100 கிராம்
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பட்டை - சிறிதளவு

    அரைக்க...

    தேங்காய் துருவல் - கால் கப்
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 3 பல்
    சோம்பு - 1 ஸ்பூன்
    பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்



    செய்முறை

    கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

    காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    அவ்வளவுதான்... செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா விசேஷங்களில் செய்யப்படும் உணவுகளில் காளன் முக்கியமானது. நேந்திரங்காய் கொண்டு செய்யும் இந்த காளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரங்காய் - 2
    சேனைக்கிழங்கு - 250 கிராம்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க:

    துருவிய தேங்காய் - முக்கால் கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 5 இலைகள்



    செய்முறை:

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    நேந்திரங்காய், சேனைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய காய்கறிகளை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

    மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த காய்களை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×