search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AVM"

    • ஏவிஎம் ஹெரிட்டேஜ் மியூசியத்தில் ரஜினி பயன்படுத்திய பைக்.
    • ஏவிஎம் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுடன் பகிர்வு.

    பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் பகிரந்துள்ளது.

    ரஜினி பயன்படுத்திய இந்த பைக்கை ஏவிஎம் ஹெரிட்டேஜ் மியூசியம்மில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஏவிஎம் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளது.

    அதில், " ஒரு பொக்கிஷமான தருணம்... ஏவிஎம் மியூசியத்தில் நீங்கள் மீட்டெடுக்கக்கூடிய ஒன்று. பாயும் புலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கைப் பார்க்க வாருங்கள்" என்றார்.

    • பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ்.
    • இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இந்த நிறுவனம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


    சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் 'ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காட்சிக்காக வைத்துள்ளனர்.


    இந்நிலையில், தற்போது இந்த மியூசியத்தில் நடிகர் அஜித்தின் பைக் இடம்பெற்றுள்ளது. அதாவது, 'திருப்பதி' படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. திருப்பதி படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    • ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    • இதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சுற்றி பார்த்தார்.

    பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, அமைச்சர் கே.பொன்முடி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவகுமார் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    இந்த மியூசியம் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் 1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய சுசுகி ஆர்வி 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த எம்ஜி டிபி கார் மற்றும் 2007ல் வெளியான 'சிவாஜி; தி பாஸ்' படத்தின் கதாபாத்திரமான சிவாஜி சிலை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்த்திற்கு வருகைதந்தார். அதன்பின்னர் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ்.குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை ரஜினி சுற்றிப் பார்த்தார்.

    • அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    ஏ.வி.எம்.நிறுவனம் அறிக்கை

    இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம் அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அஜித் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தன் தந்தையின் மறைவை சமாளிக்கும் வலிமையை பெற பிரார்த்திக்கிறோம். அஜித்தின் தந்தை ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் எஜமான்.
    • இப்படத்தின் நினைவுகளை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான படம் எஜமான். இப்படத்தில் மீனா, ஐஷ்வர்யா, நெப்போலியன், மனோரம்மா, கவுண்டமணி, செந்தில், உதயகுமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

     

    ரசிகை எழுதிய கடிதம்

    ரசிகை எழுதிய கடிதம்

    இந்நிலையில் எஜமான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள கடிதம் ஒன்று இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1993ம் ஆண்டு ரசிகை ஒருவர் எஜமான் படத்தை பார்த்துவிட்டு அதில் வரும் ரஜினியின் வானவராயன் கதாப்பாத்திரத்தை போன்று மாப்பிள்ளை தேடிவருவதாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடித்தத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ஏவிஎம் புரொடக்‌ஷன் தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் மூலம் முதன் முதலாக ஓடிடியில் கால்பதிக்கிறது.
    • நடிகர் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ்.

    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    அருண் விஜய்

    இந்த தொடரை மனோஜ் குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. சைபர் கிரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த வெப்தொடர் பற்றி ஏவிஎம் புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் அருணா குகன் கூறுகையில், "தமிழ் ராக்கர்ஸ் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும்.


    தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர்

    இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரொடக்‌ஷன் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது. அபர்ணாவும் நானும் சைபர் கிரைம், பைரஸி பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவும், அதை பற்றிய கதையை கூறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தோம்.

    திறமை மிகுந்த இயக்குனர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது " என கூறியுள்ளார்.

    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தின் செய்தியும், தலைப்பு பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. #Suriya #Hari
    சூர்யா- ஹரி காம்போவில் உருவான ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இவர் கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

    ஆனால், தற்போது சூர்யா - ஹரி இணையும் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘யானை’ என பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 



    படத்தயாரிப்பில் சில காலமாக ஈடுபடாமல் இருந்த ஏவிஎம் நிறுவனம் தற்போது மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில் களமிறங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×