search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avtar Saini"

    • விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.
    • டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், புகழ் பெற்ற சிப் டிசைனருமான அவ்தார் சைனி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    செம்பூரில் வசிக்கும் சைனி தன்னுடன் சைக்கிள் ஓட்டும் குழுவுடன் இணைந்து இன்றும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நெருள் ஜன்ஷன் மற்றும் என்.ஆர்.ஐ. சீவுட்ஸ் சிக்னல் அருகே இன்று காலை 5.50 மணிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

    நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சைனி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.

     

    விபத்தில் சிக்கிய சைனியை அங்கிருந்தவர்கள் டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், மருத்துவர்கள் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். எனினும், அங்கிருந்தவர்கள் ஓட்டுனரை துரத்தி பிடித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்.ஆர்.ஐ. கடலோர காவல் துறை ஆய்வாளர் சதீஷ் கடம், "குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுனர், ரிஷிகேஷ் காடே மீது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது."

    "ஓட்டுனர் கைது செய்யப்படவில்லை, எனினும், தொடர் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சைனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    68 வயதான சைனி இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இன்டெல் 386 மற்றும் இன்டெல் 486 மைக்ரோ-பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து பென்டியம் பிராசஸரை வடிவமைக்கும் குழுவை சைனி நிர்வகித்து வந்தார்.

    ×