search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Program"

    • விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றி அறிவுரை வழங்கப் பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா மழலையர் பள்ளியில் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், "விபத்தில்லா தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி தினத்தன்று பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றியும், பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப் பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு போன் செய்து தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • றப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2, திருப்பூர் தெற்கு காவல் நிலையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆகியவை இணைந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    காவல் ஆய்வாளர் பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.லஞ்சம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். பெருகி வரும் ஊழலை தடுக்க 0421-2482816, 8300046708 என்ற எண்களுக்கு தகவல் தர வேண்டும், அவ்வாறு தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பேசினார்.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், தினேஷ் கண்ணன், செர்லின் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நடனமாடியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது
    • விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல பிரிவு மற்றும் சமூக அமைப்புகள், நர்சிங் பயிற்சி கல்லூரிகள் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயமுரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி, அலுவலக கண்காணிப்பாளர் சிவகுமார், மனநல மருத்துவர்கள் நர்மதா, கோகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மனநலத்தை பேணிகாப்பது போதை பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது குறித்து கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம் நடைபெற்றது.

    இதில் டாக்டர்கள், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராயல் ஏஞ்சல் டுடோரியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.

    இதில் போக்குவரத்து விதிகள், மனித உரிமைகள், பொதுவான சட்ட விதிகள் போன்றவை விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பாக குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2-ம் ஆண்டு மாணவர் ராகவன் வரவேற்றார். இதில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த விளக்கமும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் 2ம் ஆண்டு மாணவர் சிவசுப்பரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார். 

    • கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு
    • சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடலூர், செப்.20-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் 24 ந்தேதி போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி (ஆடல் பாடல் விளையாட்டு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்) காலை 6 மணி முதல் 10 மணி வரை சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

    எனவே, மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களிக்கவும் கடலூர் மாவ ட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றவும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.

    முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர் ராஜலட்சுமி பேசுகையில், பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.

    இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது குடும்ப சூழல் சமுதாய பழக்கங்கள் நிறைந்த பகுதியில் உள்ளவர்கள் நல்ல நட்பு வட்டத்தின் காரணமாக உரிய வழிகாட்டுதலோடு இப்பருவத்தை எளிதில் கடந்து விடுகின்றனர்.

    பலர் சமூக ஊடகங்களின் தாக்கத்தினாலும் தவறான நட்பு, திரைப்படங்களின் பாதிப்பு, கலாச்சாரம் போன்ற போலியான பிம்பங்கள் மூலமாக தடுமாற்றத்தை சந்திக்கின்றனர்.

    இந்த நிலை மாற்றுவதற்கு இப்பருவத்தில் சற்று தடுமாறினாலும் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

    பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறைகள் கட்டுப்பாடான உடை, அலங்காரங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து ரைக்க வேண்டும். என்றார்.

    முடிவில் ஆசிரியை அஜிதா கனி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

    • குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழி–காட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் சிறப்புரையாற்றினர்.

    மதுரை மண்டல வேலை–வாய்ப்பு மற்றும் பயிற்சி மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து–ரைத்தார். தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் துணை இயக்குனர் சண்முக சுந்தர், குடிமைப்பணி தேர் வுகள் குறித்து விளக்கி–னார்.

    மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் நடத் தும் இலவச பயிற்சி வகுப்பின் அறிவுரையாளர் மலைச்சாமி பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறார் நீதி வாரிய உறுப்பினர் பாண்டி–யராஜன் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முடி–வில் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு துணை தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

    • ரெயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே திருப்பூர் ரெயில் நிலையம் இணைந்து போதை அரக்கன் போல் வேடமிட்டு இன்று திருப்பூர் ெரயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் ரெயில் நிலைய துணை மேலாளர் சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    துணை மேலாளர் பேசுகையில்,போதை பழக்கத்தைத் தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் யோகாவும் தியானமும் பயனளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதை முற்றிலும் நிறுத்த வேண்டும் .

    போதை அதற்கு அடிமையானவர்களையும், அவர்களை சுற்றியுள்ள மக்களையும் பாதிக்கும்.போதையை ஒழித்து பாதையை வளர்ப்போம் என்று பேசினார். வணிக ஆய்வாளர் ராம்நாத், ரெயில்வே ஊழியர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு, காமராஜ், ஜெயசந்திரன், விக்னேஷ், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை அரக்கன் போல் வேடமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.

    இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.

    முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×