search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

     பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்த காட்சி. 

    பல்லடம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

    சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல். ஏ.,வும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு விளம்பரத்தை துவக்கி வைத்தார். இதே போல மோட்டார் சைக்கிளில் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக துணிப்பை வழங்கும் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆறுமுகத்தின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார். பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு இலவச துணிப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், பொங்கலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் பல்லடம் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிதா,இளைஞர் அணி ராஜேஸ்வரன், தொண்டரணி பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×