search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness tournament"

    • மதுைர விளாங்குடி ராயல் வித்யாலயா பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
    • 6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு இருந்தது.

    மதுரை

    மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-பெத்தானியாபுரம் இராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளிஇணைந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலபடு த்தவும் மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல வித போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக மிக பிரமாண்டமாக சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களையும் நகர்வுகளையும் மாணவ மாணவியர் அறியும் வண்ணம் மெகா சதுரங்க போட்டி நடைபெற்றது.

    6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு மாணவ மாணவிகள் சதுரங்க காய்களை போல் வேடமணிந்து.

    அந்த சதுரங்க காய்களின் பண்புகளையும் நகர்வுகளயும் மிக துல்லியமாக மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அறியும் வண்ணம் சதுரங்க விளையாட்டு விளையாடப்பட்டது.

    சதுரங்க போட்டியில் பள்ளி நிறுவனர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம், நிர்வாக இயக்குனர்கள் தீபிகாபிரேம்குமார், கெவின் குமார், மகிமா விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள்மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது
    • 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

    பெரம்பலூர்:

    44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு வடிவிலான 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர்தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு, செஸ் போர்டில் உள்ள நாணயங்கள் போன்ற வடிவிலான மெஹந்தி வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
    • போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை, ஜூலை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று போட்டி நடைபெற்றது.

    அதனை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் சாப்டர் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×