என் மலர்
நீங்கள் தேடியது "ayodhi issue"
அயோத்தி விவகாரத்தில் தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். #MohanBhagwat #AyodhiIssue
மும்பை:
ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.
எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்ட மோகன் பகவத், இதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
#MohanBhagwat #AyodhiIssue