என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayogya"

    விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Ayogya #Vishal #SunnyLeone
    இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். 

    அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். 



    இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். #Ayogya #Vishal #SunnyLeone

    ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், விஷால் இன்று படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். #Ayogya #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளனர்.

    விஷால் அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் இணைந்த நிலையில், இன்று படப்பிடிப்பில் இணைவதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
    சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கிறார். #Ayogya #Vishal #RashiKhanna

    சண்டக்கோழி படத்தை அடுத்து விஷால் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. #Vishal #Ayogya
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், விஷாலின் அடுத்த படம் இன்று தொடங்கியுள்ளது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘அயோக்யா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கி உள்ளது.
     
    வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.



    இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத், கே.எஸ்.ரவிக்குமார், காட்ராகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
    ×