என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baahubali 2"

    • 'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
    • 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியான ஆறே நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.

    இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்ததே சாதனையாக இருந்தது. இதுவரை இந்திய சினிமாவில் டங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப். 2, கல்கி 2898 ஏ.டி., ஜவான், பதான் ஆகிய திரைப்படங்கள் தான் 1000 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல் `பாகுபலி 2' படத்தின் வசூலை முந்தியிருக்கிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2
    ரஜினி, அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.

    ‘2.0’ படம் தமிழ் உள்பட வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ‘2.0’ தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால் சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ந் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன்மூலம் ரூ.18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது.



    சென்னையில் வசூலாகி உள்ள தொகை படம் பார்ப்பதற்கு கொடுக்கப்பட்ட 3டி கண்ணாடி கட்டண தொகையும் உள்ளடக்கியது. 3டி கண்ணாடி தொகையைச் சேர்க்காமல் என்றால், 17 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

    அதைச் சேர்க்காமல் வரும் வசூலில் ‘பாகுபலி-2’ படத்தை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருகிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2

    டப்ஸ்மாஷ் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் வியந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். #Baahubali
    ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. 

    இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது.



    இந்நிலையில், பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சியை டப்ஸ்மாஷில் இளைஞர்கள் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் ‘ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சூப்பர்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 
    பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
    பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

    6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.



    ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
    ×