என் மலர்
நீங்கள் தேடியது "Babita"
- 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் டங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.
இதனால், டங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, "எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.
பபிதா போகத் காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 55 கிலோ எடைப் பிரிவில் 2010-ல் வெள்ளியும் 2014ல் தங்கமும் வென்றுள்ளார். இவரது அக்கா கீதா போகத்திற்கு பிறகு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர்கள் போகத் சகோதரிகள். குறிப்பாக கீதா போகத் மற்றும் பபிதா போகத் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை பெற்று தந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை அரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒழுங்கின்மை காரணமாக போகத் சகோதரிகள் உட்பட 15 பேர் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜி புஷன் சரண் சிங், 'தேசிய முகாமில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகள் மூன்று நாட்களில் நேரில் இங்கு நேரில் வர வேண்டும் எனக் கூறப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனை நேரில் வந்து தனது பயிற்சியாளர்களிடம் கூறி தீர்வு காணலாம். ஆனால் கீதா போகத், பபிதா போகத், சாக்ஷி மாலிக்கின் கணவர் சத்யார்த் கண்டியன் உட்பட 15 பேர் நேரில் வரவில்லை. மேலும், வராதது குறித்து எந்த தகவலும் கூறவில்லை. இது மிகப்பெரிய ஒழுங்கற்ற செயலாகும்.

இதனால் இவர்கள் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளித்த பின்னர் தடையை விலக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்' என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய பபிதா போகத், 'எனக்கு இரண்டு கால்களிலும் அடிபட்டுள்ளது. அதனால் நான் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. நான் இதுகுறித்து பெடரேசனுக்கு விளக்கம் அனுப்பியுள்ளேன்' எனக்குறிப்பிட்டார். #AsianGamescamp #GeetaPhogat