என் மலர்
நீங்கள் தேடியது "bachelor"
- ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இவர் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் 25-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷின் 25-வது படத்தை 'காதலிக்க யாருமில்லை' படத்தை இயக்கியுள்ள கமல் பிரசாத் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
- 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி.
- தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திவ்யாபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.