search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baghdad"

    ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IraqBlast #Baghdad
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

    பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது, குண்டுவெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. 
    ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். #BaghdadBlast
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சதர் நகரில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று அதிகாலை திடீரென வெடித்துச் சிதறின. இதில், ஆயுதங்கள் வைத்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.

    இந்த விபத்தில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு 16 ஆக அதிகரித்தது. 32 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ஆயுதக் குழுவினர் தங்களுக்கு சொந்தமான கையெறி குண்டுகள், ராக்கெட் மூலம் ஏவப்படும் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை அதிக அளவில் சேமித்து வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு சக்திவாய்ந்த ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றன. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BaghdadBlast
    ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Baghdadblast
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே சதர் நகரில் உள்ள வெடி மருந்து கிடங்கு இன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Baghdadblast
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், நேற்று இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ×