என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balaji"

    • இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    நிற்க அதற்கு தக போஸ்டர்

    கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

    வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ஜோடி, நுனோ போர்ஜஸ்- பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.
    • போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலா ஜோடி போர்த்துகீசிய ஜோடியான நுனோ போர்ஜஸ் மற்றும் பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் போலீஸ் நிலையத்தில் மனைவி நித்யா புகார் செய்து உள்ளார். #Balaji #Nithya
    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார்.

    நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார்.

    இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற சக நடிகர்கள் உள்பட பலரும் மகளுக்காக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர். அதை ஏற்று இருவரும் சேர்ந்து வாழ்வதாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அனைவரும் நினைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று கூறியுள்ளார்.



    மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா தெரிவித்து இருந்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நித்யாவிடம் அதற்கான புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர். இது தொடர்பாக போலீசார், நடிகர் தாடி பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது அவர், வெளியூரில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், 2 நாட்களில் சென்னை வந்ததும், விசாரணைக்கு வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடித்து வரும் மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #Dhanush #Maari2
    தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் தனுஷுக்கு கை, மற்றும் கால்களில் அடிப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நலமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

    இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
    ×