என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » balangir
நீங்கள் தேடியது "balangir"
ஒடிசாவின் கந்தமால், பலாங்கிர் மாவட்டங்களில் பாதுகாப்பு படை நடத்திய நடந்த என்கவுண்டரில் 6 நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். #NaxalEncounter
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள கோலங்கி கிராமத்தின் அருகே சுடுகும்பா காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பெண்கள் உள்பட 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NaxalEncounter
ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒடிசா மாநில அரசின் சார்பில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
×

X