search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baleno"

    • 2023 ஜூனில் 1. 59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது
    • மாருதி சுசுகியின் மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகிஇந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.79 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

    2023 ஜூனில் 1.59 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 12.4% விற்பனை அதிகரித்துள்ளது

    அதே போல் இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 1.37 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

    2023 ஜூனில் 1.33 லட்சம் உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனையான நிலையில் தற்போது 3% விற்பனை அதிகரித்துள்ளது.

    ஆனால், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய மினி-செக்மென்ட் கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 14,054 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 9,395 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

    பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 64,471 யூனிட்களில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் 64,049 யூனிட்டுகளாக சற்று குறைந்துள்ளது.

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. #Toyota



    டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் இணைந்து வியாபாரம் செய்ய இருப்பதாக 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இருநிறுவனங்கள் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் கார் மாருதி பலேனோ மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மேலும் டொயோட்டா நிறுவனம் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டீசரை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய டொயோட்டா கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா பிராண்டிங்கில் பலேனோ கார் ஜூன் மாதத்திற்குள் வெளியாகலாம் என தெரிவித்தது. புதிய டீசர் புகைப்படத்தில் காரின் பின்புறம் மட்டும் காட்சியளிக்கிறது.



    இதில் கார் பார்க்க பலேனோ போன்றே தெரிகிறது. அந்த வகையில் புதிய கிளான்சா மாடல் காரில் புதிய கிரில் மற்றும் முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா கார் இந்தியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா கிளான்சா கார் இரண்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #MarutiSuzuki #Baleno



    மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரினை இந்தியாவில் ஜனவரி 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெக்சா விற்பனையாளர்கள் புதிய பலேனோ காருக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.11,000 முதல் ரூ.21,000 வரை செலுத்தலாம் என கூறப்படுகிறது. புதிய பலேனோ காரின் விநியோகம் அடுத்த மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில் புதிய காரின் முன்பக்க பம்ப்பர் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்படும் நிலையில், புதுவித அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஷார்க் ஃபின் ஆன்டெனா மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    புதிய பலேனோ காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. டீசல் மோட்டார் 75 பி.எஸ். மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறனும் ரெட்ரோல் மோட்டார் 84 பி.எஸ். மற்றும் 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். 

    விலையை பொருத்த வரை புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதைய மாடலை விட ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய பலேனோ கார் துவக்க விலை ரூ.5.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ×